கரி காலன் வடதிசைப் படையெடுப்பைப் பற்றி
கரி காலன் வடதிசைப் படையெடுப்பைப் பற்றி சிலப்பதிகாரத்தில் இயங்கோவடிகள்.....................".இருநில மருங்கில் பொரு நரைப் பெறா அச்..........செருவெங்காதலின் திருமாவளவன்........புண்ணித்திசைமுகம் போகிய அந்நாள்............இமையவர் உறையும் சிமையப்பிடர்த்தலைக்..........கொடுவரி ஒற்றிக் கொள்கையில் பெயர்வோற்கு..........மாநீர் வேலி வச்சிர நந்நாட்டுக் கோன் இறைக் கொடுத்தக் கொற்ற பந்தரும்..........மகத நநாட்டு வாழ்வாய் வேந்தன்..........பகை புறுத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்..........அவந்தி வேந்தன் உவந்தன்னக் கொடுத்த..........நிலந்தோங்கு மரபின் தோரண வாயிலும்"............கரிகாலனுடைய வெற்றியின் விளைவுகள் இங்கே கூறப்படுகின்றன.தென்னாட்டில் போர் செய்ய வாய்ப்புகள் குறைந்ததால் தோள்கள் தினவெடுத்து வட நாட்டிற்கு கரிகாலன் படையெடுத்ததாகக் கூறுகிறார் இளங்கோவடிகள்.கரிகாலன் இமயத்தின் நெற்றி,பிடரி இருபுறமும் தன் புலிப்பொறி நாட்டினான்.வச்சிர நாட்டு மன்னன் முத்துப்பந்தலும் ,மகத நாட்டு வேந்தன் பட்டி மண்டபம்மும் அவந்தி வேந்தன் தோரண வாயிலும் அளித்தான் எனக் குறிப்பிடுகிறார்.இங்கு வச்சிர அவந்தி மகத நாட்டு மன்னர்கள் எதிரிகளாகத் தோன்றவில்லை.இவர்கள் மௌரியர் காலத்திற்குப்பின் குப்தர்கள் காலம் தொடங்கும் வரை தமிழ் மன்னர்களுடன் சுமுக உறவுடன் தங்கள் நாட்டையும் வளப்படுத்திக்கொண்டனர்.குப்தர் காலத்தில் மீண்டும் பகை எழுந்து சோழ மன்னர்களின் படை எடுப்பால் மீண்டும் நேசத்தொடர்பு வளர்ந்தது எனலாம்.
Comments
Post a Comment