கோச்சடையான் என்னும் ரணதீரன்

"கொங்கலரும் நறும் பொழில்வாய்க்.......குயிலோடு மயில் அகவும்.......மங்களாபுரம் என்னும் மாநகருள்.....மாரதரை எறிந்தழித்து".இப்பாடல் கோச்சடையானைப்பற்றியது.அரிகேசரி மாற வர்மனுக்குப்பின் பட்டம் தரித்த பாண்டியமன்னன்
கோச்சடையான் என்னும் ரணதீரன். இவன் ஆட்சிக்காலம் கி பி 670 முதல் 710 வரை.இவன் தென்ன வானவன்.செம்பியன் ,சோழன்,மதுர கர்நாடகன்,கொங்கர் கோமான் என்னும் புகழ்ப்பெயர்கள் தாங்கியவன்.இவை அவன் வெற்றிகளைக்குறிக்கின்றன.மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தனை திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள மருதூரிலும், மங்களாபுரத்திலும் [இன்றையமங்களூர்] போரில் வென்று புறங்காட்டி ஓடச்செய்தவன் கோச்சடையான்..........."பொருதூறும் கடல் தானையை.......மருதூரில் மாண்பு அழித்து"............எனப்பாடப்பெற்றுள்ளான்.மங்களூரில் அவன் வெற்றிகொண்டது மராட்டிய மன்னனைத்தான்.மாரதரை எனப் பாட்டில் வருவது மராட்டியரையே குறிக்கும்.இவர்கள் சாளுக்கியர்களே ஆவர் என பல சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்