வள்ளலார் பாடல்களை வெளிக் கொணர்ந்த தேவர்:.
வள்ளலார் பாடல்களை வெளிக் கொணர்ந்த தேவர்:...........வடலூரில் ஆண்டு தோறும் தைப்பூசத்திருவிழா நடக்கும்.ஆப்படி ஒரு விழாவின் போது வள்ளலாரின் அருட்பா பற்றி பேச தேவர் வந்திருந்தார்.மேடையில் அருகில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஓமாந்தூர் ராமசமி ரெட்டியாரும் அமர்ந்திருந்தார்.தேவர் பேச ஆரம்பிக்கும் முன்னர் ரெட்டியார் அவர் காதில் ஏதோ சொல்ல அதற்கு தேவர்" விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று பேச ஆரம்பித்தார்.ஒரு மணி நேரம் அருட்பாவில் மூழ்கி முத்தெடுத்தார்.அந்த உரையை மக்கள் அனைவரும் கேட்டு ஆனந்தமாக ரசித்தனர்.இறுதியில் ரெட்டியாரை ஒரு பார்வை பார்த்து விட்டு ராமலிங்க அடிகளார் "ஓலைச்சுவடியில் எழுதி வைத்த இன்னும் 9 பாடல்கள் அச்சுக்கு வராமல் ரகசியமாக அவரது உறவினர் ஒருவர் வைத்துக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.அப்பாடல்களை அவரே வெளியிடுவாரா அல்லது நானே வெளியிடட்டுமா ?"எனக்கேட்க கூட்டத்தில் இருந்து பதில் இல்லை."அந்த பாடல்களை மடத்துக்கு தந்து வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள்" என வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் பதில் இல்லை".சரி நானே பாடுகிறேன்" என்று தேவர் அப்படல்களைப் பாடினார்.ஒவ்வொரு பாடல் முடிவிலும் அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது அவர் பாடி முடித்தவுடன் கூட்டத்தில் இருந்து ஒருவர் சில கையேடுகளைக் கொண்டு வந்து தேவரின் காலடியில் வைத்து" அய்யா என்னை மன்னித்து விடுங்கள் இதோ அந்தப்பாடல்கள்" என ஒப்படைத்தார்.ரெட்டியாருக்கு ஆனந்தம் தாளவில்லை தேவரைப்பார்த்து "அய்யா நீங்கள் தான் ராமலிங்க அடிகள்" என உரக்கச்சொன்னார்.கூட்டத்தினர் மகிழ்ச்சியில் கரவொலி எழுப்பினர். நீண்ட நேரம் கைத்தட்டல் ஓயவில்லை.
Comments
Post a Comment