நேதாஜி.......தேவர்
- Get link
- Other Apps
டிசம்பர் 1949 நேதாஜி பத்திரிகை தொடங்கி 11 மாதங்கள் ஆகி விட்டது.கல்கத்தாவில் இருந்து நேதாஜியின் சகோதரர் சரத் சந்திர போஸ் அழைப்பை ஏற்று தேவர் கல்கத்தா சென்றார்.அவரை சென்ட்ரல் நிலையம் வரை வந்து சசி வர்ணத்தேவர் வழியனுப்பினார்.அதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் தேவரைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை.தேவர் இறந்து விட்டார் என வதந்திகள் பரவின.ஆனால் தேவர் சீன எல்லைப்பகுதியில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது.வரும்போது கேரளா வழியாக மதுரை வந்தடைந்தார்.தோற்றம் மாறியிருந்தது.மீசையை எடுத்து விட்டு தலைமுடியை நீளமாக வளர்த்திருந்தார்.ஜனவரி23 1951ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமான கூட்டத்தில் பேசினார்.அப்போது நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறார்.திபெத் சீன எல்லைப்பகுதியில் அவரைப்பார்த்து விட்டு அவருடன் இருந்தேன் என்றார். அச்செய்தி அடுத்த நாள் பத்திரிக்கைகளில் வெளியானது.அது ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- Get link
- Other Apps
Comments
Post a Comment