ராஜ ராஜனின் வெற்றிகள்
ராஜ ராஜனின் ஆட்சித்திறனுக்கு அப்பால் அவன் போரில் கண்ட வெற்றிகள் மட்டுமே எந்தப்பேரரசனும் கண்டிராத வெற்றிகள் எனத்துணிந்து கூறலாம்.உண்மையில் ஹானிபல்.சீசர்,அலெக்ஸாண்டர்,நெப்போலியன் ஆகியோரை மிஞ்சக்கூடிய அளவிற்கு ராஜ ராஜன் தான் சென்ற இடம் எல்லாம் வெற்றி கண்டான்.இவனுடைய படை மகா சேனை என அழைக்கப்பட்டது. காலாட்படை,குதிரைப்படை.யானைப்படை எண்ணற்றவை.20 லட்சம் வீரர்களும் அறுபதாயிரம் யானைகளும் எண்ணற்றக்குதிரைகளும் இருந்ததாகக்கூறப்படுகிறது.அதல்லாமல் 600 போர்க்கப்பல்கள் இருந்தன.அந்தக்காலத்தில் எவ்வித தொலைத்தொடர்புக்கருவிகளும் இல்லை.எப்படி இவர்களை நிர்வாகம் செய்தான் என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.ஏதோ ஒரு சிற்றரசன் அவன் மெய்க்கீர்த்தியில் ராஜ ராஜன் வெற்றிளைத்தொகுத்து தந்துள்ளான்............................".காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி,............வேங்கை நாடும் கங்கை பாடியும்,..........தடிகை பாடியும் துளம்ப பாடியும்,..........குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்,..........முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,..........இரட்ட பாடி ஏழரை இலக்கமும்,.......... முன்னீர்ப் பழ்ந்தீவுப் பன்னீராயிரமும் கொண்டு , த...