Posts

காமராஜர்.

Image
மேலே நிற்பவர்கள்: இடமிருந்து வலம்...சோமசுந்தர பாரதியார்,சத்தியமூர்த்தி,குருசாமி முதலியார்,வேதநாயகம் பிள்ளை.............நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள்:வரதராஜுலு நாயுடு,வ ஊ சிதம்பரம் பிள்ளை,பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்...........கீழே அமர்ந்திருப்பவர்கள்:முத்துசாமி ஆசாரி,சீனிவாசன்,காமராஜர் .

கருவூர்த்தேவர்

Image
தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளறையில் உள்ள சிவலிங்கம் மிகப்பெரியது.அதற்கு ஆதி சைவரைக்கொண்டு மருந்து சாத்திப் பந்தனம் செய்வித்த போது மருந்து இளகிப் பந்தனம் ஆகவில்லை.ராஜராஜன் மனம் நொந்தான்.அது சமயம் சைவ முனிவரான கருவூர்த்தேவர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து செவ்வனே பந்தனம் செய்வித்தார் என கருவூர் புராணம் சொல்கிறது.இக்கருவூரார் தஞ்சைப்பெரிய கோயிலின் மீது பதிகம் பாடியுள்ளார்.அப்பதிகம் ஒன்பதாம் திருமறையில் இடம் பெற்றுள்ளது. Unlike  ·  Comment  ·  Share

நாடு என்றால் என்ன?

Image
நாடு என்றால் என்ன? தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுகிறோம். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லலையாகவுடைய நிலம் நெடுங்காலம் தமிகம் என வழங்கப்படுவதாயிற்று. தமிழகமானது தொன்று தொட்டு முடியடை வேந்தர்களான சேர, பாண்டிய, சோழர்களால் ஆட்சிபுரியப்பெற்று வந்தது. அதனாலே தமிழகம் சேரமண்டலம் எனவும், பாண்டி மண்டலம் எனவும், சோழ மண்டலம் எனவும் மூன்று பிரிவுகளையுடையதாயிற்று. இவை மண்டலம் என்னும் பெயரானன்றி நாடு என்னும் பெயரானும் வழங்கும். பின்பு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்னும் பிரிவுகளும் உண்டாயின. இம்மண்டலங்களின் எல்லை, அளவுகளைப் பின்வரும் தனிப்பாடல்கள் உணர்த்தும். சேர மண்டலம் வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோ...

அரசமரபு பாய்மரக்கப்பல்கள்

Image
13ம் நூற்றாண்டு அரசமரபு பாய்மரக்கப்பல்கள் தண்ணீர் உட்புகுதலை தடுக்க ஏற்றவாறு அடித்தளங்களைக் கொண்டிருந்தன. இவ்வகைக் கப்பல்களில் சில சோழ கடற்படை பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது

அக்காலக் கப்பல்கள்

Image
ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மகனின் ஆட்சிக்காலத்தில் சிக்கலான வகைப்பாட்டுக் கடற்கலங்கள வகைள் மற்றும் அதன் பயன்பாடு என்பன இருந்தன. அவற்றில் எஞ்சிய கடற்கள வகைகளின் பெயர் மற்றும் பயன்பாட்டு என்பன கீழ் வருமாறு. தாரணி - ஆழ்கடல் போருக்காக வடிவமைக்கப்பட்ட தற்கால அழிப்பு கடற்கலங்களுக்குச் சமமானது. லூலா - சிறு போர் மற்றும் வழித்துணை கடமைகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட தற்கால வழித்துணைக்கப்பல்களுக்குச் சமமானது. வஜிரா - சிறியளவு ஆயுதம்தரித்த, விரைவுத் தாக்குதல் போர்க்கப்பல். திரிசடை - பெரியளவில் ஆயுதம் தரித்த இரண்டுக்கு மேற்பட்ட இலக்குகள் சண்டையிடக்கூடிய என அறிக்கையிடப்பட்ட போர்க்கப்பல்கள் அல்லது போர்க்கலங்கள். இவை வேகம் மற்றும் தாக்குதல் என்பவற்றைவிட அதன் கட்டுமானத்தில் தங்கியிருந்தன. அக்காலக் கப்பல்கள் ஒரு சிறிய ஈரூடகப்படையை வேலைக்கமர்தியபோதும், இவ்வகைக் கப்பலில் அவர்களுக்குத் தனி அறைகள் மற்றும் பயிற்சி பகுதியில் என்பவற்றைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இக்கப்பல் சமநிலையற்ற போர் நடவடிக்கை ஈடுபடக்கூடியது என்று கூறப்படுகிறது. இவ்வகை கடற்களங்களைத்தவிர அரச உல்லாசப்படகுகளும் இருந்தன. அவை பின்வரும...

சோழர் கடற்படை3

Image
சோழர் கடற்படை 500 வருடங்களாகப் போரில் ஈடுபட்டுள்ளது. இதில் தொடர்ச்சியான சிறு சண்டைகள் முதல் போர்கள்வரை அடங்கும். தீபகற்பத்தை கட்டுப்படுத்த பாண்டியருக்கும் சோழருக்கும் இடையிலான 5ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு பல கதைகளையும் நாடோடிக் கதைகளயும் உருவாக்கியது. குறிப்பிடத் தக்க போர் நடவடிக்கைகள் பின்வருமாறு பாண்டியர் போர் வெற்றி (கி.பி 1172) பாண்டியர் போர் வெற்றி (கி.பி 1167) பாலி போர்க் கப்பல்கள் அழிப்பு (1148) கலிங்க படையெடுப்பு கடற் சண்டைகள் (1081-83) இரண்டாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (கி.பி. 1025-1028) முதலாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (கி.பி. 1022 CE -1025) கடாரம் மீதான சோழர் படையெடுப்பு (1024-1025) கம்போஜா எனப்பட்ட கம்போடியா இணைப்பு (கி.பி ?-996) இலங்கை மீது படையெடுப்பு (கி.பி 993–1077) பல்லவ கடற்படையுடன் மோதல்கள் (கி.பி 903 - 908) ஆட்சேர்ப்பும் சேவையும் கப்பற்படைத்தலைவர்கள் கடற்படை வீரர் ஆட்சேர்ப்பு, பயிற்சி போன்ற விடங்களில் சுதந்திரமாகச் செயற்பட சோழ சக்கரவர்த்திகள் அனுமதி அளித்திருந்தனர். அங்குச் சிக்கலான சோதனைகள் மற்றும் மதிப்பீடு இருக்கவில்லை. எக்குடிமகனும் அல்லது...

சோழர் கடற்படை2

Image
சோழர் கடற்படை கலப்பு பதவிக் கட்டமைப்பு கொண்டிருந்தது. அவர்கள் கடற்படை பதவிகளையும், தரைப்படையிலிருந்து பெறப்பட்ட பதவிகளையும் கொண்டிருந்தனர் சோழர் கடற்படையானது கடற்படை பதவி மற்றும் தரைப்படை பதவி முறைகளைப் பயன்படுத்தியது. தற்கால பதவி முறைகளும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, தரைப்படை கப்டன் கடற்படை லெப்டிணட் தரத்திற்கும், கடற்படை கப்டன் தரைப்படை கேணல் தரத்திற்கும் சமமானது. மற்றவை முற்றிலும் வேறுபட்டன. சில பதவித் தர ஒப்பீடுகள் பின்வருமாறு: மிகச்சிறந்த படைத்தலைவர் :சக்கரவர்த்தி - பேரரசன் கடற்படையின் கட்டளை அதிகாரி :ஜலதிபத்தி - கடற்படையின் கடற்படைத் தலைவருக்குச் சமம் போர்க்கப்பல்களின் படைத்தலைவர் : பிரிவு+ அதிபதி அல்லது தேவர்/ன் அல்லது நாயகன் - கடற்படை துணைத் தலைவருக்குச் சமம் போர்க்கப்பல்களின் படைப்பிரிவு படைத்தலைவர் : கனதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம் குழு படைத்தலைவர் : மண்டலதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம் கப்பல் படைத்தலைவர் : கலபதி - கப்டன் தரத்திற்குச் சமம் கப்பலின் ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி : காப்பு - ஆயுதங்களுக்களு...