Posts

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்

Image
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது. இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக க ொண்டாப்படும் விழாக்களாகும். செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயரா...

பட்டினப் பாலை-- காவிரியின் சிறப்பு--சோழ நாட்டின் சிறப்பு

Image
பட்டினப் பாலை-- காவிரியின் சிறப்பு------ வசை இல் புகழ், வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும், தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி, வான் பொய்ப்பினும், தான் பொய்யா, மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் சோழ நாட்டின் சிறப்பு------ விளைவு அறா வியன் கழனி, கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின், கவின் வாடி, நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூச் சாம்பும் புலத்து ஆங்கண், காய்ச் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை முழுக் குழவி, கூட்டு நிழல், துயில் வதியும் கோள் தெங்கின், குலை வாழை, காய்க் கமுகின், கமழ் மஞ்சள், இன மாவின், இணர்ப் பெண்ணை, முதல் சேம்பின், முளை இஞ்சி அகல் நகர் வியல் முற்றத்து, சுடர் நுதல், மட நோக்கின், நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை, பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும், முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா, கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து, Like · · Share

மந்தரை

Image
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர் மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும், ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும். அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும், துரக்க, நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்; இரக்கம் இன்மை அன்றோ, இன்று இவ் உலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே.------கம்பராமாயணம்    .

தஞ்சைப் பெரிய கோவில் அமைப்பு

Image
காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்தியின் மாதிரியை கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. கோயில் அமைப்பு சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. தவிர இந்த மாபெரும் கோய...

இராஜராஜேஸ்வரம்

Image
இராஜராஜ சோழன் சிவபெருமான் மீது கொண்ட அதிகப் பற்றுதலின் காரணமாக தஞ்சாவூரில் மிகப்பெரிய கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினான். மேலும் இக்கோயில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும் மிகப்பெரும் சாதனையாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினான். அவனது விருப்பப் படி இந்தக் கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரும்பான்மையாக அவன் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த கற்கள் அனைத்தும் முழுமையாகச் செதுக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்க சுமார் 34 வருடங்கள் வரை ஆகியது. இக்கோயில் கோபுரம் தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரம் உடையது. இக்கோயில் கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து எகிப்திய பிரமிடுகளைப் போல் 190 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவமான கல் சுமார் 80 டன் அளவுடையது. இக்கோயிலின் மூலவரான பிருகதீசுவரர் (பெருவுடையார்) லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கத்தின் உயரம் 13 அடி. ஆவுடை எனும் லிங்கத்தின் கீழ்ப்பகுதியான வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாக இருக்கிறது...

"அய்யாறப்பர் கோயில்"

Image
மாமன்னன் கரிகால் சோழன் இமயத்தில் இருந்து நாடு திரும்பும் போது திருவையாறு வழியாக தேரில் வந்து கொண்டிருந்தான்.அப்போது ஓரிடத்தில் தேர் நகர முடியாமல் சக்கரங்கள் பூமியில் அழுந்தி விட்டன.அவ்விடத்தில் அகழ்ந்து பார்த்த போது பூமிக்கடியில் சிவலிங்கம் ,சக்தி,வினாயகர்,முருகன்,நந்தி,சப்தகன்னிகள்,சண்டன்,சூரியன் ஆகிய சிலைகளுடன் சடை முடியுடன் "அகப்பேய் சித்தர்" தியானத்தில் அமர்ந்து இருப்பதைக்கண்டான்.கரிகாலன் அவரை வணங்க சித்தர் எவராலும் வெல்ல முடியாத "தண்டம்" ஒன்றைக் கரிகாலனுக்குப் பரிசளித்தார். அங்கு சிவனுக்குக்கோயில் கட்டுமாறு பணித்தார்.சித்தர் கூறியபடி கரிகாலன் அங்கு சிவன் கோயிலைக்கட்டினான். அவ்வாறு கட்டப்பட்டது தான் "அய்யாறப்பர் கோயில்".இந்த நிகழ்ச்சியைப் பற்றியக் குறிப்பு திருவையாறு அய்யாறப்பர் கோயிலில் தலவரலாற்றுக் குறிப்பில் காணப்படுகிறது.

கிளி சோழன்

Image
திருவரங்கம்------ஒரு நாள் சோழ மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடி விட்டு காவிரிக்கரையில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.அப்போது மரத்தின் மேல் அமர்ந்திருந்த கிளி ஒன்று "இது நாராயணன் வாழும் இடம் "எனப்பொருள்பட ஸ்லோகங்கள் சொல்வதைக் காதில் கேட்ட மன்னன் வியப்படைந்தான்.ஆட்களை விட்டு அவ்விடத்தைத்தோண்டி அகழ்ந்து பார்த்த போது பூமிக்கடியில் புதைந்து போன சிறிய மண்டபத்துடன் கூடிய ரங்கநாதர் உருவச்சிலையைக்கண்டான். அதைவெளிக்கொணர்ந்தான்.பின்பு மறு நாள் ரங்க நாதர் அவன் கனவிலும் தோன்றினார்.எனவே மன்னன் மணல் மேடுகளை அகற்றி திருவரங்கம் கோயிலைக்கட்டிப் புணரமைத்தான் .புதிதாக மண்டபம் ஒன்றும் கட்டினான்.அதற்கு "கிளி மண்டபம்" என்று பெயரிட்டான்.காவிரியாற்றின் இருபுறமும் வடவாறு,தென்னாறு எனக்கால்வாய்கள் வெட்டி வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகளை செய்தான்.கோயிலைப்புதுப்பித்து திருப்பணிகள் செய்து நாள்தோறும் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற வழி செய்தான்.அதன் பின்னர் கோயில் "திரு வரங்கன் திருப்பதி" என அழைக்கப்பட்டது. அந்த சோழமன்னன் வேறு யாரும் அல்ல.கிளி சோழன் என அழைக்கப்...