Posts

பட்டினப்பாலை

Image
பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி

Image
சம்ஸ்கிருதம் யாருடைய மொழி? ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல. அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம். அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல. அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்] உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட அதை இப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது...

சங்ககாலதிற்கு முன்பிருந்த சோழர்கள்

Image
சங்ககாலதிற்கு முன்பிருந்த சோழர்கள். (தமிழர் வரலாறு - History of Tamil ) புறநானூறு பாடல்களில் இருந்து பெறப்பட்ட சோழமன்னர்களின் பெயர்கள். தோராயமாக அறியபட்ட அவர்களின் ஆட்சி காலங்கள். ஏறி ஒலியன் வேந்தி 3023 B.C.E மாந்துவாழி C. 2980 B.C.E எல் மெய் நன்னன் C. 2945 B.C.E கீழை கிஞ்சுவன் C. 2995 B.C.E வாழிசை நன்னன் C. 2865 B.C.E. மெய் கியகுசி ஏற்று C. 2820 B.C.E. ஆய் குழி அகுசி ஏற்று C. 2810 B.C.E. திழகன் மாந்தி C. 2800 B.C.E. மாந்தி வேலன் C. 2770 B.C.E. ஆய் அடும்பன் C. 2725 B.C.E. ஆய் நெடுஞ செட் சோழ தகையன் C. 2710 B.C.E. எல் மெய் ஆக்குவன் (அ) கீழ் நெடு மன்னன் C. 2680 B.C.E. முடிகோ மெய் காளையன் தகையன் C. 2650 B.C.E. இளங்கோ கீழ் காளையன் தகையன் (எ) இலங்கீழ் நன்னன் C. 2645 B.C.E - இவருடைய சகோதரர் ஆய் கீழ் நன்னனால் கடம்பர் வழி தோற்றம். காளையன் குடின்ஞான் C. 2630 B.C.E. நெடுங்காளையான் தகயன் C. 2615 B.C.E. வேங்கை நெடுவேல் வரையன் C.2614 B.C.E. வேட்கால் குடின்ஞான் C. 2600 B.C.E. மெய்வேல் வரையன் C. 2590 B.C.E. சிபி வேந்தி C. 2580 B.C.E. பருநோஞ்சி சாமழிங்கன் C. 2535 B.C.E. செ...

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்

Image
1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் #வாய்ப்பு உள்ளவர் படியுங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இரு...

திருப்புறம்பயம் போர்

Image
தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் ------ பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் திருப்புறம்பியத்தில் நடந்த போரில் சுமார் மூன்றரை லட்சம் வீரர்கள் இறந்தனர்.------ விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்ற...

ஆதித்த சோழன்

Image
ஆதித்த சோழன் (கி.பி 871 - 907), பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது. மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது. கல்வெட்டு ஆதாரங்கள் பலம் மிக்க பல்லவ மன்னன் அபராசித வர்மனை தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது. தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ...

முதலாம் ஆதித்தசோழனைப் பற்றிய கல்வெட்டு.

Image
முதலாம் ஆதித்தசோழனைப்(கி.பி 871 முதல் கி .பி 907 வரை) பற்றிய கல்வெட்டு.கும்பகோணம் அருகில் பட்டீஸ்வரத்திலிருந்து 1கி.மீ தூரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது..ஆதித்த சோழன் ராணிகளுள் ஒருவரானதொண்டை மண்டலத்தைச்சார்ந்த காஞ்சிபுரம் குதிரைச்சேரி அம்மாக்கனார் மகள்"அழகி கட்டடிகள்" திருசோமேஸ்வரம் கோயிலுக்கு 20 கழஞ்சு பொற்காசுகள் அளித்ததாகவும் தொண்டை மண்டலத்திலிருந்து இங்கு வந்து கோயில்திருப்பணிகள் ஆற்றிய தனது தாயாரின் நினைவாக தினம் ஒரு ஆழாக்கு நெய் ஊற்றி விளக்கேற்ற ஆத்ரேயன் சாந்தன் என்பவனை நியமித்ததாகவும் இந்த கல்வெட்டு கூறுகிறது.மேலும் ஆதித்த சோழனுக்கு தென்னவன் மாதேவி,திரு நாரண மாதேவி மற்றும் செம்பியன் தேவி என்கிற குலமாக்க நம்பிராட்டியார் என்ற ராணிகளும் இருந்தனர் .அவருடைய ஆட்சியில் சோழ நாடு பரந்து விரிந்திருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது கல்வெட்டில் அவருடைய 19 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் திருவையாறு பஞ்ச நதீஸ்வரர் கோயிலுக்கு விளக்கேற்ற 30 கழஞ்சு பொற்காசுகள் அளித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.------The Hindu,16,april,2010