Posts

திருப்பதி மூர்த்தி

Image
திருப்பதி-------------------திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில் எழுந்தருளி வசித்த ுவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர்---------------------------------------------ஸ்ரீனிவாசன் ஈண்டெழுந்தருளியமைக்கு காரணம் பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின் ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது. எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின் கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்னும் மும்மூர்த்...

துநின் பவளவாய் காண்பேனே

Image
துநின் பவளவாய் காண்பேனே------------------------------------- திருப்பதி, திருமலை, ஏழுமலையோன் ஆதிவராக சேத்திரம் என்று இன்றும் பல பெயர்களால் போற்றப்படும் திருவேங்கடத்து வாசம் செய்யும் ஸ்ரீனிவாசனே, எத்தனையோ பிறவிகளாக தீர்க்கவியலாவாறு தொடர்ந்துவரும் பாவங்களைத் தீர்ப்பவன். அதனால்தான் வல்வினைகள் தீர்க்கும் திருமால் என்றார். பாவங்களைப் போக்க வல்ல இப்பேர்ப்பட்ட நின் கோவிலை நாடிவரக்கூடிய அடியவர்கள், தேவாதி தேவர்கள், அரம்பையர்கள் ஆகியோர் மதித்துவரக்கூடிய ஒரு படிக்கல்லாக நின் கோவிலின் வாசலில் கிடக்கமாட்டேனா, அவ்வாறுதான் கிடப்பேன் அவ்விதமே கிடந்து நின் பவளவாய் கண்டுகொண்டே இருப்பேன் என்று குலசேகராழ்வாரால் பாசுரஞ்சூட்டப்பட்ட இத்தலம் இன்றைய கலியுகத்தில் உலகப்பிரசித்திபெற்றதாகத் திகழ்கிறது.-------------------------------------------------------------------------------------------------------------------- -----இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பா...

இராமானுஜர்

Image
இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர். இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக் காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்.

மறமாணிக்கம்

மறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம் புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, மன்னர் கல்லுாரி பேராசிரியர்கள் நடத்திய கள ஆய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் கருப்பையா ஆகியோர், புதுக்கோட்டை அடுத்த குளத்துார் தாலுகா, காவேரி நகரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:குளத்துார் தாலுகா பகுதியில், கள ஆய்வு மேற்கொண்டபோது, சாலையோரம் கிடந்த, மூன்று அடி உயரமுள்ள, ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டை ஆய்வுசெய்த போது, அதில், ‘மீநவந் முத்தரையர் ஊர்.ெ-(ந)டுங்குடி இர(ண்)டு கரை நாட்டு மறமாணிக்கர், பெ(ா)ந் மாணிக்க நல்லுார்’ என்று, ஒன்பது வரிகள் எழுதப்பட்டுள்ளது. இதை, பொன்மாணிக்கநல்லுார் என்ற ஊரில், இரண்டு கரை நாட்டு மறமாணிக்கர் தீர்மானித்தபடி நடப்பட்ட...

புரட்டாசி

Image
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் பேருந்து இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்தது. தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் பாத யாத்திரை தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்குச் சான்று. சென்னையிலிருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி பாலாஜி. காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்கவேண்டும். துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின்தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடா...

பி.ரத்தினவேலு தேவர்

Image
பி. இரத்தினவேலு தேவர் திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924முதல் 1946 வரை 4 முறை நகராட்சித் தலைவர் பொறுப்பேற்று நகர வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். 1946இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவர், பிற்காலத்தில் நீதிக்கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டார். திலகரும், காந்தியாரும் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் போதனைகளை மக்களிடம் ...

தஞ்சைப் பெரிய கோயில்

Image
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள்..! தஞ்சை பெரிய கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்...