Posts

பழையாறை

Image
பழையாறை பழையாறை சோழர்களின் 5 தலைநகரங்களின் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்நாளில் சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின் 2 வது தலைநகராக மாறியது. ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு என்ற பெயர்களெல்லாம் பழையாறை என்ற பெருநகரத்திற்குரிய பண்டைய பெயர்களாகும். காவிரிப்பூம்பட்டினம் கி.பி.4ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடல்கோளால் அழிந்தது. பின்பு உறையூரைச் சோழர்கள் அரசியல் தலைநகராகக் கொண்டாலும் தங்கள் வாழ்விடமாகத் தேர்வு செய்த பெருநகரம்தான் பழையாறை. இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டு காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இக்கோநகரம் இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது. அமர்நீதி நாயனார் இவ்வூரில் பிறந்தார். கி . பி 840 இல் விஜயாலய சோழனுக்கு பழையாறையில் தான் வசித்து வந்தான். பின்னர் பாண்டியருக்கும், பல்லவருக்கும் ஏற்பட்ட போரில் பல்லவருக...

கள்ளர் இனம்.

Image
தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம்.முதிர்காலம், முதுகாலம், சங்காலம் முதல் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய குறுநில மன்னர் குடிகள் பலவாகும், அவற்றுள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை சிறப்பு வாய்ந்த கள்ளர்குல மரபுகள் பலவாகும்.------பேரரசர்கள் மனுகண்ட சோழனும், அறம் கண்ட சிபியும், நிறைகண்ட செம்பியனும், காவிரி கரைபடைத்த கரிகாலனும், வானுயர் கோயில் தந்த ராசராசனும் வழி வந்த இனமே கள்ளர் இனம்.

216 சிவாலயங்கள்

Image
காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. 216 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளோம்.  எண் - கோயில் - இருப்பிடம் - போன்  சென்னை மாவ ட்டம் 01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706. 02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151. 03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670. 04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477. காஞ்சிபுரம் மாவட்டம் 05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084. 06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006. 07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108. 08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084. 09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664. 10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல்,...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

Image
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் .

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

Image
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

"வேலு நாச்சியார்"

Image
- "வேலு நாச்சியார்" ----வடநாட்டில் ஜான்சி ராணி தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர். ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783 முடிசூட்டு விழா கி.பி 1780 பிறப்பு 1730 பிறப்பிடம் இராமநாதபுரம் இறப்பு 25 டிசம்பர், 1796 முன்னிருந்தவர் முத்து வடுகநாதர் அரச வம்சம் சேது மன்னர் உலகையே அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் காரர்களை அடக்கி மண்டியிட வைத்தவர். வெள்ளையர்கள் மன்னிப்பு கேட்ட ு பட்டயம் அனுப்பியது மகாராணி வேலுநாச்சியாரிடம் மட்டும் தான் .வெள்ளையரை போரில் வென்ற முதல் மகாராணியும் இவர்தான். . "வேலு நாச்சியார்" இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்னும் ஊரில் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாருக்கு பிறந்தவர். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றாற் போல், வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் பத்து மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். இப்படி வீறுகொண்டு வளர்ந்த இளம் பெண் வே...

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

Image
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 4 கிமீ தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில். கோயில் மண்டபங்களின் மேல் கூரையிலும் தூண்களிலும் எண்ணற்ற நடனமாடும் சிற்பங்கள். ஒரு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள குட்டி 'மினியேச்சர்' சிற்பங்களும் உண்டு. இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயிலைத் தன் உயிரைக் கொடுத்துக் கட்டியிருக்கிறான் இந்த சோழ மன்னன். இவனுடைய முன்னோர்கள ் ராஜராஜன் தஞ்சை கோயிலை 13 அடுக்கு கோபுரத்துடனும் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் 9 அடுக்கு கோபுரத்துடனும் சிவன் கோயில்களை அமைத்தனர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் ஐந்து அடுக்குகளுடன் ஐராவதேஸ்வரர் கோயிலின் கோபுரத்தை அடக்கமாக உருவாக்கினான். ஆனால் உள்ளே தேர்வடிவ முக மண்டபத்தை எழுப்பியும் காலத்தால் அழியாத அரிய சிற்பங்களையும் தூண்களையும் உண்டாக்கியும் தன் கலைச்செறிவினால் வரலாற்றில் தனியிடம் பெற்றான். ராஜராஜனும் ராஜேந்திரனும் "மகேஸ்வர சிவம்" என்னும் சிவனே உயர்ந்தவன் என்னும் கொள்கையைத் தழுவி, அதைப் போற்றும் வகையில் தங்கள் கோயில்களைக் கட்டி...