Posts

சித்திரை மட்டுமே தமிழ் புத்தாண்டு:

Image
சித்திரை மட்டுமே தமிழ் புத்தாண்டு: அன்று தான் நாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும். நாமும் பல்லாயிரம் வருடமாக அதை சித்திரையே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதற்கு பல ஆதாரங்களை நான் தருகிறேன் .அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர...

வளைகாப்பு

Image
வளைகாப்பு  என்ற  இந்து சமயச் சடங்கு  கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்கு ஆகும். முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்கிறார்கள். மணப்பெண் போலவே பெண்களை அலங்கரித்து கைநிறைய வளையல்களை அடுக்குகிறார்கள். பெண்களே பங்கேற்கும் இவ்விழாவில் மகப்பேறடைந்த தாய்மார்கள் வந்திருந்து புதியதாக தாய்மை எய்தியிருக்கும் பெண்ணிற்கு வளையல்கள் அணிவதும் தாங்களும் அணிந்து கொள்வதும் நிகழும். பண்டைக்காலத்தில் சூலுற்றப் பெண் நல்ல முறையில் ஈன்றெடுக்க வேண்டும் என இச்சடங்கு வந்திருக்கலாம். மற்றொரு கருத்தாக ஆறாம் மாதம் முதல் முழந்தையின் கரு வெளியுலகை உணரத் தொடங்குகிறது; அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக இந்தச் சடங்கு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சில குடும்பங்களில் வேதியரை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை பும்சுவன சீமந்தம்  என்று நடத்தப்படுகிறது.

பாகற்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்:

Image
பாகற்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன. பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன. தி னந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம் பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும். பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.  டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற...

மரணமில்லா மரபினரின் பட்டங்கள்

Image
மரணமில்லா மரபினரின் பட்டங்கள் பட்டப்பெயர் சுமையாக தெரிந்தல் சுமந்து பாருங்கள் அதன் வலிமையும் செயல் திறனும் உங்களை வளமிகு உச்சத்திற்கு சுமை இன்றி உயர்த்திவிடும்.  எம்முன்ணோர்கள் உழைப்பில் கரையாமல், களங்காமல், கலையாமல் அணிந்த மேலாடையே நம் கு ல பட்டங்கள். அலங்காரபிரியன் முதல் வைகைராயன் வரை ஈராயிரம் பிரளாயமே வியக்கும் பட்டங்கள். வில்லவன், வள்ளவன், ஈகைகொண்டான், நாடாள்வான் என நீளும் மரணமில்லா மரபினரின் பட்டங்கள். குருதி சிந்திய குலத்துக்கு பட்டங்கள் மரித்தும் மரணமில்லா மறவர்களுக்கு பட்டங்கள் மடிந்தும் மார்பினில் வேல் தாங்கிய மறவர்களுக்கு பட்டங்கள் மண்கொண்ட மன்னர்களுக்கு பட்டங்கள் மாராயம் கொண்ட கள்ளர்களுகோ பட்டமோ பட்டங்கள் பல்லாயிரம் பட்டங்கள். கள்ளர்குலம் அணிந்திருக்கும் மென்மையான மேல்மையான ஆடையே நம்குல பட்டங்கள்.கள்ளர் குலம் உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந...

சுண்டைக்காய்

Image
கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம். சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.  பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று. 

நாவல்பழம்

Image
நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ்,  இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.  ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தின் கடின தன்மை மாறி இலகுவாகும். மேலும் ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதி  பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும் சக்தி நாவல்பழத்துக்கு உண்டு. மேலும் மலச்சிக்கலை  போக்கும். மூலநோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலநோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த  நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக்கோளாறுகளை போக்கி குடல்தசைகளை வலுவடைய செய்யும் சக்தி நாவல்பழத்துக்கு உண்டு. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள்,  நாவல்பழத்தை மதிய உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்...

சந்திரோதயா மந்திர்

Image
கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் ‘சந்திரோதயா  மந்திர்  ‘என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலய த்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார்.  ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என்றறியப்படும் ‘இஸ்கான்’ அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய ‘அக்‌ஷய் தாம் பிருந்தாவன்’ பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, வேத விற்பன்னர்களின் மந்திர ஒலியுடன் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று தொடங்கியது. இவ்விழாவில் ஆன்மிக பெரியோர்கள், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமா மாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பெரும் திரளாக பங்கேற்றனர். ------maalai malar