Posts

இருக்குவேளிர்

Image
இருக்குவேளிர் விஜயாலயன் தோற்றுவித்த சோழப் பேரரசு தொடர்ந்து 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டது. இதற்குக் காரணம் அந்தச் சோழ மாமன்னர்கள் மட்டும் அல்ல. அவர்கள் காட்டிய திசைவழியில் ஈட்டிகளையும் வேல்களையும் ஏந்தி, தேர்பூட்டிப் படைநடத்தி உயிர்கொடுத்து வெற்றிக்கனி பறித்தோர் ஏராளம். ஏராளம். அவர்களில் சிலர் சிற்றரச மரபினர். இருக்குவேளிர், பழுவேட்டரையர், மழவரையர் எனப் பலகுறுநிலத்தலைவர்கள் படைத ிரட்டி உதவியதால்தான் சோழமன்னர்களின் சாதனைகள் சாத்தியமாயின. அத்தகைய ஓர் சிற்றரசர்குடியே கொடும்பாளூரை தலைநகராகக் கொண்ட இருக்குவேளிர்குடி. இவர்களில் செம்பியன் இருக்குவேள், மகிமாலய இருக்குவேள், பூதிவிக்கிரமகேசரி எனப் பலதலைவர்கள் சோழர் படை நடத்தியவர்கள். இவர்கள் ஆண்ட தலைநகரம் கொடும்பாளூர் இன்றைய மதுரை – திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக கொடும்பாளூர்சத்திரம் என்ற பெயரில் இருக்கிறது. இவ்விடத்தில் இறங்கி சற்றே கிழக்காக இரண்டு கி.மீ தொலைவு சென்றால் கொடும்பாளூர் மூவர்கோயிலைக் காணலாம். இக்கொடும்பாளூர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகள...

பெண் குல திலகம் செம்பியன் மாதேவி

Image
பெண் குல திலகம் செம்பியன் மாதேவி 10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் இளவரசியை மணந்தார். கண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே செம்பியன் மாதேவி. கண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார். கணவர் கண்டராதித்தருக்குப் பிறகு சோழ அரியணையில் அமர அவருடைய பிள்ளைக்கு உரிமை இருந்தாலும் மிகச் சிறிய பாலகனானதால், தாய் அனைவருக்கும் வழிகாட்டினாள். சோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான...

கொடும்பாளுர் ராயர்---- என்ற கள்ளர் அரச குலத்தினர்

Image
கொடும்பாளுர்ராயர்---- என்ற கள்ளர் அரச குலத்தினர் - கள்ளர், கொடும்புரார், வேளிர் கொடும்பாளுர் மன்னர்களான வேளிர் மரபினர் கள்ளர் குலத்தின் கொடும்புரார், கொடும்புராயர், கொடும்பாளுர்ராயர், கொடும்மளுர்ராயர் பட்டங்களுக்கு உரியவர்கள்ஆவர்கள் புதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர். சோழ சரித்திரத்தின் புகழ் பெற்ற ஊர் .கொடும்பாளுரில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இங்கே இரண்டு முக்கிய கோவில்கள் உள்ளன. வேளிர் மரபின் மிச்சமாக உள்ள மூவர் கோவில் அதில் ஒன்று. மற்றது முசுகுந்தேஸ்வரர் கோவில். இரண்டுமே அதன் கலை எழிலுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவை. புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தமிழகத்தில் அதிகமான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன.குறிப்பாக திருமயம் கோட்டை ,குடுமியான்மலை. நார்த்தா மலை சமண படுகைகள், சித்தன்னவாசல் குகை ஒவியங்கள், சோழர் கால கோவில்களான திருக்கட்டளை,கலியபட்டி.குன்னாந்தார் கோவில், ஆதனக்கோட்டை. கீழாநிலை, மலையடிபட்டி, திருவரங்குளம், சமணர்களை கழுவேற்றம் செய்த ஒவியங்கள் உள்...

இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்

Image
வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மா தத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்...

அதியமான்,மலையமான்-- கள்ளர் குல மன்னர்கள்

Image
கள்ளர் குல மன்னர்கள்-----அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர். இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் இறந்தது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது. அதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தக...

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்

Image
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும். கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்ட ுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர். நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி கல்யாண மண்டபத்தின் எழில் மிக்க சிற்ப தூண். கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்குதிரை, க...

சோழ மன்னர்களின் மணவுரவுகள்.

Image
சோழ மன்னர்களின் மணவுரவுகள். 1. உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி கி.பி 2ம் நூற்றாண்டில் அரசுபுரிந்தவன்.கரிகால் சோழனின் தந்தையுமாவான். இவன் மனைவி கள்ளரின அழுந்தூர் வேளிர் குல இளவரசியாவாள். 2. கரிகால் சோழனின் மனைவி கள்ளரின திருநாங்கூர் வேளிர் குல இளவரசியாவாள். 3. கரிகால் சோழனின் மகள் நற்சேனையை மணந்தவன் சேரன் இமயவரம்பன். இவர்களின் மகன்கள் மா மன்னன் சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகார இளங்கோ அடிகளும் ஆவர். வீரமும் புலமையும் ஒரே வயிற்றில் தோன்றிய நல் முத்துக்கள் . 4. விசயாலய சோழன் (கி.பி. 846 - 881) ஆவூருக்கு அருகில் உள்ள ஊத்துக்காடு என்னும் ஊரில் கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (கள்ளரின மன்னன் இராசராச சோழன். புலமை வேங்கடாசலம் பக்கம் 6) 5. விசயாலய சோழனின் மகன் முதல் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் இளங்கோப்பிச்சி என்பவளையும், மற்றும் காடுபட்டிகள் வழி வந்த காடுவெட்டியார் மகள் திரிபுவன மாதேவியையும் மணந்திருந்தான் (E.P.Ind.Vol.XXVI, பக்கம் 233, 234) 6. முதல் ஆதித...