தென்பாண்டி சிங்கம்


நாட்டரசர் என்ற் கள்ளர் தான் அம்பலக்காரர் என அறியவும்.-------------------பாண்டியர் ஆட்சி இயல்--
நாட்டியல்--
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர், கூற்றம், மண்டலம், நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.

"முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு"

—(புறம்-110)

"வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே"

—(புறம்-242)
என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும்-- ஊர்கள் கூற்றம்,நாடுகளில் அமைந்தன.--,
இரணிய முட்டநாடு , குடநாடு , புறப்பறளைநாடு , ஆரிநாடு , களக்குடி நாடு , திருமல்லிநாடு
தென்புறம்புநாடு , கருநிலக்குடிநாடு , வடபறம்புநாடு , அடலையூர்நாடு , பொங்கலூர்நாடு , திருமலைநாடு,
தென்கல்லகநாடு , தாழையூர்நாடு செவ்விருக்கைநாடு கீழ்ச்செம்பிநாடு , பூங்குடிநாடு, விடத்தலைச்செம்பிநாடு,
கீரனூர்நாடு , வெண்புலநாடு, களாந்திருக்கைநாடு, பருத்திக் குடிநாடு , அளநாடு , புறமலை நாடு,
துறையூர்நாடு , துருமாநாடு, வெண்பைக் குடிநாடு , இடைக்குளநாடு , நெச்சுரநாடு , கோட்டூர்நாடு,
சூரன்குடிநாடு , பாகனூர்க்கூற்றம் ,ஆசூர்நாடு ,தும்பூர்க்கூற்றம் ,ஆண் மாநாடு, கீழ்வேம்பநாடு,
மேல்வேம்பநாடு , தென்வாரிநாடு , வடவாரிநாடு ,குறுமாறைநாடு , குறுமலைநாடு, முள்ளிநாடு,
திருவழுதிநாடு , முரப்புநாடு , தென்களவழிநாடு ,வானவன் நாடு , கீழ்களக்கூற்றம் , கானப்பேர்க்கூற்றம்,
கொழுவூர்க்கூற்றம் , முத்தூர்க்கூற்றம், மிழலைக்கூற்றம் ,மதுரோதயவளநாடு , வரகுண வள நாடு, கேளர சிங்கவளநாடு,
திருவழுதி வளநாடு , வல்லபவள நாடு ,பராந்தகவள நாடு ,அமிதகுண வளநாடு,
(நாடும் கூற்றமும் அடங்கியது வளநாடு) பாண்டியர்களின் இயற்பெயரும்,சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.
-------------------------------------பாகனேரி
தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராகும்.

'பாகனேரி நாடு ,தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. சற்றேறக்குறைய 750 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்த பகுதியாகும். அதாவது கிழக்கில் அரண்மனை சிறுவயல், காளையார் கோவில், தெற்கில் மறவமங்கலம், ராஜசிம்ம மங்கலம், மேற்கில் சிவகங்கை, சோழபுரம், வடமேற்கில் திருக்கோட்டியூர், வடக்கில் பட்டமங்கலம் வரை விரவிக் காணப்படுகிறது. இவற்றுள் காளையார் கோயிலில் எட்டில் மூன்று பங்கு பாகனேரி நாட்டினுள் அடங்கும். தவிர கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் சிறு பகுதிகளும் இந்நாட்டில் இடம் பெறுகின்றன. இதன் எல்லைகளைக் குறிக்கச் சூலக்குறி பொறித்த எல்லைக்கற்கள் எல்லை நெடுகிலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டுள்ளன.
இந்நாடு ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, இங்கு வாழும் மக்களால் ஒருவகை தன்னாட்சி முறையில் பேணிக் காக்கப்பட்டு வருகிறது.

   சிற்றூர்கள்

பாகனேரி, நகரம்பட்டி, காடனேரி, மாங்காட்டுப்பட்டி, நெற்புகப்பட்டி, புலவன்பட்டி, கற்றப்பட்டு, வடக்குக் காடனேரி, அம்மன்பட்டி, வீளநேரி, காளையார்மங்கலம், கருங்காலக்குடி, கௌரிப்பட்டி, பனங்குடி, கோவினிப்பட்டி, கீழக்கோட்டை, கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர், அல்லூர், சித்ததூர், பெரியகண்ணனூர்.
இவற்றுள் கருங்காலக்குடிக்கு மட்டும் நாட்டமைப்பு உருவாக்கிய காலத்தில் இருந்த மக்கள் தொகையின் அடிப்படையில் அரைச் சிற்றூர் என்ற தகுதி வழங்கப்பட்டது. மொத்தம் 22 1/2 சிற்றூர்கள் இந்நாட்டிற்கு உட்பட்டுள்ளன, எனவே 22 1/2 சிற்றூர் எனப்பட்டது.
இருபத்து இரண்டரைச் சிற்றூர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நாட்டில் தற்போது சிறியனவும், பெரியனவுமாக 128 ஊர்கள் உள்ளன. சில ஊர்கள் தனி ஊர்கள் என்ற தகுதியையும் வேறு ,சில ஊர்கள் உட்கடைச்சிற்றூர்களையும் சேர்த்து ஊர் என்னும் தகுதியையும் பெற்றன.
மேலவெள்ளிஞ்சம்பட்டி, கீழவெள்ளிஞ்சம்பட்டி, தச்சன் புதுப்பட்டி, புத்திரிப்பட்டி, கோவில்பட்டி, ஆளவளத்தான் பட்டி ஆகிய ஆறு உட்கடைக் கிராமங்கள் கத்தப்பட்டு ஊரைச் சேர்ந்தவை. திருத்திப்பட்டி, பிளாமிச்சாம்பட்டி,மும்முடிசன்பட்டி, சக்கரவர்த்திப்பட்டி, சீவூரணி, சூரம்பட்டி, வீரநேந்தல் ஆகிய ஏழு உட்கடைக் கிராமங்கள் பனங்குடி, கோவினிப்பட்டி ஊரின் கீழ் உள்ளன. இவை தற்போது பாகனேரி நாட்டில் இருந்து பிரிந்து தனித்து இயங்குகின்றன.
பெரிச்சிக்கோயில், ஆளவிலாம்பட்டி, சடையன்பட்டி, கொலாம்பட்டி, கொங்கராம்பட்டி, ஊடேந்தல்பட்டி, பொய்யாமணிப்பட்டி, கொட்டகுடி ஆகிய எட்டு உட்கடைக் கிராமங்கள் கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவைகளாகும். இவைகளும் தற்போது பாகனேரி நாட்டில் இருந்து பிரிந்து தனித்து இயங்குகின்றன
பாகனேரி நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர்,அல்லூர், சித்ததூர், பெரியகண்ணனூர் ஆகிய ஏழு ஊர்ளும் அவற்றின் உட்கடைக் கிராமங்களும் ஏழூர்ப்பற்று என வழங்கப்படுகின்றன. இவற்றுள் கீரனூர் என்ற ஊர் ஏழூர்ப்பற்றுக்கு தலைமை இடமாகும்.

நட்பு மற்றும் பகை நாடுகள்

பாகனேரி நாட்டுப் பெருநான்கெல்லையைச் சூழ்ந்து மற்ற பிற நாடுகளும் அமைந்துள்ளன. அவற்றுள் சில நட்பாகவும் சில பகைமை உணர்வுடன் இருந்தன, இருக்கின்றன. இவற்றுள் மல்லாக்கொட்டை, கண்டரமாணிக்கம், குன்னங்கோட்டை, மங்கலம், பூக்குழி ஆகிய நாடுகள் பாகனேரி நாட்டுடன் நீண்ட காலமாக நட்புறவு கொண்டுள்ளன. ஆறூர்வட்டகை, பட்டமங்கலம் நாடுகள் பகைமை உணர்வுடன் உடையன. உதாரணத்திற்கு வாளுக்குவேலி தேவனுக்கும் வல்லத்தராயனுக்கும் ஏற்பட்ட விரோதத்தால் இன்றளவும் இவ்விரு நாடுகளும் பகைமை உணர்வுடனேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாகனேரியில் பாண்டியர் கால சிவன் கோயில் உள்ளது
--------------------
பாகனேரி நாட்டுத் தலைவரான வாளுக்கு வேலி அம்பலகாரரை, ஆங்கிலேயர்கள் கனவில் கண்டால் கூட அச்சம் கொள்ளுவார்களாம், அப்படியொரு தோற்றம். மருதிருவருக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த சண்டையில் அம்பலகாரர்கள் துணை மருதிருவருக்கு பெரியதோர் பலம் என்பதை அறிந்த ஆங்கிலேயர் தளபதி கர்னல் அக்னியூ வாளுக்கு வேலு அம்பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினான். "சொந்த மண்ணையும் தலைவர்களையும் அன்னியர்களுக்கு விற்பனை செய்ய நாங்கள் வியாபாரிகளல்ல, வீரர்கள்; பிழைத்து போ..." என விரட்டியடித்தார் அம்பலம். சிவகங்கை நாட்டுக்கு ஆதரவாக வெள்ளைய இராணுவத்தோடு பெரும் சண்டையிட்டனர் பாகனேரி அம்பலகாரர்கள்
------------------------மருதுபாண்டியரைக் காப்பாற்ற படை திரட்டி சென்ற
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்:::
மருதுபாண்டியர்கள் ஆங்கிலயர் கையில்
சிக்கிவிட்டார்கள் காளையார் கோவில்
வெள்ளைக்காரர் வசமாகிவிட்டது.
ஊமைத்துரை மற்றும் விடுதலைப் படையை சேர்ந்தவர்கள் அனைவரும்
கைது செய்யப்பட்டனர் பெரியமருதுவையும்
சின்னமருதுவையும் திருப்பத்தூர்
கோட்டையிலே தூக்கு மாட்டி கொன்று தண்டனையை நிறைவேற்ற
போகிறார்கள் என்று கதறினான் மேகநாதன். வாளுக்கு வேலிஅம்பலம் புதிய தெம்புடன்
நம்பிக்கையுடன்கம்பீரமாக பேசினான்...
"முடியாது... மருதுபாண்டியரை தூக்கிலிட
அனுமதிக்க முடியாது கள்ளர் நாட்டுபடைகள்
மருது சகோதரர்களுக்கு கடைசி நேரத்தில்
துணை நிற்காமல் நமது பகைதீர்க்க இங்கு வந்து நமக்குள்
சண்டையிட்டு கொண்டபடியால்
அல்லவா ஆங்கிலேயர்களின் கை ஓங்கிவிட்டது.
இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை.
பாகனேரி பட்டமங்களபடைகள் என் தலைமையில்
அணிவகுக்கட்டும் திருப்பத்தூர் கோட்டை நோக்கி புறப்படுவீர் இப்போதே... பெரியமருது சின்ன மருது இருவரையும்
விடுவிப்போம் ..
நாம் போகும் வழியெல்லாம் உள்ள ஊர்களில் எல்லாம்
வீரர்களை திரட்டிசெல்லுவோம்
ஆங்காங்கே போர்பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமல்ல
எக்குலதராயினும் அனைவரும் தமிழ்க்குலம்-தல ைதாழாக்குலம், தன்மான மிக்ககுலம்என்ற
உணர்வோடு புறப்படட்டும் ! தீரமிக்க
தமிழ்குடிகளின் முற்றுகை கண்டு திருப்பத்தூரில்
பரங்கியர் பதறட்டும்! அக்னியுவின் ஆணவம்
அடங்கட்டும் விடுவிப்போம்
மருது பாண்டியரை வாரீர் வாரீர் ! நான் முன்னால் செல்கிறேன் எனக்கு பின்னால்
ஒவ்வொரு அணியாக நமது படைகள் வரவேண்டும்"
என்று ஆணையிட்டு குதிரையை தட்டிவிட்டான்
அந்த மாவீரன். வைரமுத்தன், ஆதப்பன், மேகனாதன் மற்றுமுள்ள
படைத்தளபதிகள் ஐம்பது அடி இடைவெளி தூரத்தில்
படைகளுடன் அணிவகுத்து புறப்பட்டார்கள்.
எல்லோருடைய நினைவும் திருப்பத்தூர்
கோட்டை பெரியமருது சின்னமருது தூக்குதண்டனை இவற்றை சுற்றியே அலைந்து கொண்டிருந்தது.
படை வரிசை பாகனேரி எல்லையை கடந்து திருப்பத்தூரை நோக்கி போகின்ற காட்சியே காட்சி... அதோ வந்துவிட்டது... கத்தபட்டு என்னும் இடத்தில்
வைரமுத்தனை கொல்லுவதற்கு உறங்காப்புலி சதிசெய்து படுகுழி வெட்டி வைத்திருக்கிறான்
அங்கே குழி இருப்பது யாருக்கும் தெரியாமல்
இலைகள் பரப்பிவிடப்பட்டு அதன்
மீது மண்பத்தைகளும் வைத்து மூடப்பட்டிருகிறது . படைகளுக்கு தலைமையேற்றுள்ள
வாளுக்கு வேலி அம்பலம் அந்தகுழியிருப்ப
து தெரியாமலேயே படைகளுக்கு முன்பு ஐம்பது அடி தொலைவில்
பயங்கர வேகத்தில் குதிரையில்
சென்று கொண்டிருகின்றான் . பின்னால் திரும்பி "வேகமாக வாருங்கள் விரைவில்
திருப்பத்தூர் சென்றடைந்தால்தான்
மருது சகோதரர்களை மரண படுகுழியில்
இருந்து மீட்க முடியும்" என்று முழங்கியபோது... அந்த பயங்கர படுகுழியில்
குதிரையோடு விழுந்தான். அந்த தீடீர்
பயங்கரத்தை கண்ட
படை நிலைகுலைந்து ஓடி வந்தது அதற்குள்
குழியை மண் மலைபோல மூடிக்கொண்டது.
அத்தனை படைவீரர்களும் ஓரிரு நொடியில் அந்த குழியை தோண்டி மண்ணை அகற்றி வாளுக்கு வேலியை வெளியே கொண்டு வந்தனர்.
அந்த தென்பாண்டி சிங்கம் கத்தப்பட்டுப் படுகுழியில்
இருந்து சவமாக வெளியே வந்தான்!
இன்றைக்கும் கத்தபட்டில் சிலையாக
நின்று கொண்டிருக்கிறான்--------
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1798 ஆம் ஆண்டு கயத்தாறு புதியமரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்த துயரம் தோய்ந்த நாட்களில் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு இந்த நாட்டின் மீது தொழு நோயாக பரவிக்கொண்டிருந்த கால கட்டத்தில் பெரிய மருது, சின்ன மருது என்ற பேராண்மை மிக்க வீரர்கள் பிரிட்டிஷ் கம்பெனிப் படைகளை எதிர்த்து நின்ற நேரத்தில் காலனி ஆதிக்கத்தை தன்னுடைய காலடியால் மிதிப்பேன் என்றுரைத்த வீரர் குல நாயகன் தான் வாளுக்கு வேலி. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேலே உரைவிட்டெழுந்த வாள் இரண்டை பதித்தது போல மீசை, கம்பீரத்தை காட்டும் விழிகள், அவற்றில் கருணையின் சாயலையும் அன்பின் பொழிவையும் கூட காண முடியும். நீண்டு உயர்ந்து வளைந்த மகுட தலைப்பாகை, நெடிய காதுகளில் தங்க வளையல்கள், விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்கமும் சலங்கையும், இரும்புத்தூனனைய கால்களிலும் எஃகு குண்டனைய முகங்களிலே காப்பு, கையிலே ஈட்டி, இத்தனை சிறப்புகளையும் சிலைவடித்து, கத்தப்பற்று என்னும் கிராமத்தில் இன்றைக்கும் காட்சி தருகிற தென்பாண்டி சிங்கமாம் வாளுக்கு வேலி இடத்தே காணலாம். வாளுக்கு வேலி, வீரம் துள்ளுகின்ற வார்த்தைகளால் அமைந்த பெயர். பாகனேரி நாட்டுக்குத் தலைவன்.--------------------------------------------------------------------  --------------------------வருகுதைய்யா மறவர்படை வானவில் சேனைதளம்,
மறவரோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்...

கையிலே வீச்சருவா காலிலே வீரத்தண்டை,

நெத்தியில் பொட்டுவச்சு நீலவண்ணப் பட்டுடுத்தி,

தோளே வாளான துடியான வீரனடா...

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...

படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா...

வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா...

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...

இருநூறு வருஷம் முன்னே இனமானம் காத்தவன்டா...

வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா...

இருநூறு வருஷம் முன்னே இனமானம் காத்தவன்டா...

வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா...

ஊமைத்துரைக்கு தான் உற்ற நண்பனாம் சீமைத்துரைகளுக்கு சிம்ம சொப்பனம்...

ஊமைத்துரைக்கு தான் உற்ற நண்பனாம் சீமைத்துரைகளுக்கு சிம்ம சொப்பனம்...

சிம்ம சொப்பனம்... அவன் சிம்ம சொப்பனம்...

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...

கைவளரி வீசிவிட்டால் கைலாசம் கலங்குமடா...

வேல்க்கம்பு விட்டெறிஞ்சா வெண்ணிலவில் தைக்குமடா...

கைவளரி வீசிவிட்டால் கைலாசம் கலங்குமடா...

வேல்க்கம்பு விட்டெறிஞ்சா வெண்ணிலவில் தைக்குமடா...

வானத்தைக் கீறி உனக்கு வைகறைய பரிசளிப்பான்...

மானம் காக்கும் மறவனடா நம்ம மருதுபாண்டியர் தோழனடா...

மருதுபாண்டியர் தோழனடா... மருதுபாண்டியர் தோழனடா...

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...

படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா...

வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா...

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...

படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா...

வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா...

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா...

வரிப்புலியின் வர்க்கமடா அந்த வறியோரின் சொந்தமடா...
---

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்