சிவலோக நாதனைக்கண்டு


சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்
பவபயங்களைப் போக்கி அவர்
பரம பதத்தைக் கொடுப்பா ரந்த
சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்
அற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி மறந்தோம்
கற்பிதமான ப்ரபஞ்சமிதைக் கானல் சலம்போலே யெண்ணி சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்
ஆசைக்கடலில் விழுந்தோமதால் அறிவுக்கறிவை யிழந்தோம்
பாசமகலும் வழிப்படாமல் பரிதவிக்கும் பாவியானோம்
சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்
மானிடசன்மங் கொடுத்தார் தன்னை வணங்கக்கரங்க ளளித்தார்
தேனும்பாலும் போலே சென்று தேரடியில் நின்றுகொண்டு
சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்------கோபாலகிருஷ்ணபாரதியார்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்