ஆயுத_பூஜை, #சரஸ்வதி_பூஜை

*#ஆயுத_பூஜை, #சரஸ்வதி_பூஜை

#கொண்டாடுவது_ஏன்?

#எவ்வாறு_வழிபடுவது?

#ஆயுத_பூஜை*

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்காக நம் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு இந்த ஒரு நாள் நாம் நன்றி சொல்வது தான்.

ஆயுத பூஜை அன்று செய்யும் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

ஆயுத பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது.

*#வழிபடும்_முறை :*

அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும்.

அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம்.

தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.

சுத்தம் செய்த பின் அவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.

பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேதினமாக படைத்து வழிப்படலாம்.

*#ஆயுதபூஜை_சிறப்பு :*

செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும்.

ஆயுத பூஜையன்று, ஆக்கப்பு ர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

#சரஸ்வதி_பூஜை

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.
:
சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

*#வழிபாடு_முறை :*

சரஸ்வதி பூஜை அன்று அதிகாலை வீட்டை சுத்தம் செய்து, நீராடுவதை முடித்து விட வேண்டும்.

ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.

படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும்.

மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.

அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும்.

மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

*#சரஸ்வதி_பூஜையின்_சிறப்பு :*

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்...

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்