கம்ப இராமாயணம் - இராம நாமத்தின் மகிமை

கம்ப இராமாயணம் - இராம நாமத்தின் மகிமை

இராம நாமம் எவ்வளவு சிறந்தது? அதைக் கூறுவோருக்கு என்ன என்ன பலன் கிடைக்கும்?

கம்பர் சொல்கிறார்...

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.

சீர் பிரித்த பின்:

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடு அயல் வழியுமாக்கும் வேரியன் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை 
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே

பொருள்:

நாடிய பொருள் கை கூடும் = தேடிய பொருள் கை கூடும்
ஞானமும் புகழும் உண்டாம் = அறிவும் புகழும் சேரும்
வீடு அயல் வழியுமாக்கும் = முக்தி (வீடு பேறு) அடைய வழி வகுக்கும்
வேரியன் கமலை நோக்கும் = தேன் நிறைந்த தாமரையில் இருக்கும் திருமகளை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை = பெரிய அரக்கர் சேனை
நீறு பட்டு அழிய   = சாம்பலாகி அழிய  
வாகை சூடிய = வெற்றி பெற்ற
சிலை இராமன் = வில்லை கொண்ட இராமன்
தோள் வலி கூறுவோர்க்கே = தோளின் ஆற்றலை கூறுவோர்க்கே 

கம்ப இராமாயணத்திற்கு இணையான ஒரு நூல் இல்லை...

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

பறவை நாச்சியார்

வாணர் குல அரசர்கள்