எசாலம் செப்பேட்டின் முகப்பு இலச்சினை

இராஜேந்திர சோழன் தனது 25 ம் ஆட்சியாண்டில் (1037)  வெளியிட்ட எசாலம் செப்பேட்டின் முகப்பு இலச்சினை,

அசப்பில் திருவலங்காடு இலட்சனையை போல் இருந்தாலும், இதில் ஒரு வேறுபாடு உள்ளது,

இலட்சனையின் நடுவே ஒரு சக்கரவடிவம் உள்ளது ஒரு சக்கரவர்த்திக்கான அடையாளம் இது..
இராஜேந்திரரின் மற்ற செப்பேடுகளில் இச்சக்கர வடிவம் இராது.

சோழர்களின் சின்னமான புலி.. அவர்கள் பாண்டியரை வென்ற அடையாளமாய் மீன், சேரர்களுக்கான வில்,
சாளுக்கியர்களின் அடையாளமாய் பன்றி,

அனைவரையும் வென்றவர்கள் என்பதற்காய் ஸ்வஸ்திக் சின்னம்..கடாரத்தை வென்றதன் அடையாளமாய் தோரணம்.. வென்கொற்றக்குடை,
இருபுறமும் கவரிகள்,

அரசர்களின் திருமுடிகளில் இரத்தினங்களாய்
திகழும் இது பரகேசரிவர்மனான
இராஜேந்திர சோழனின் சாசனம்.❤❤❤

ஆயிரம் ஆண்டுகளாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக மூவாயிரம் ஆண்டுகளாக பார்ப்பான் உங்களை அடிமைப்படுத்தி வச்சிருந்தான்னு தீராவிட நாடோடிகளின் ஊளை ஒப்பாரியைக் கேட்டு தமிழன் தன் வரலாற்றை இழந்துதான் மிச்சம்,

கங்கைக்கொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு  இராசேந்திர சோழன் படையெடுத்து சென்று வென்ற நாடுகளையெல்லாம் அம்மண்ணுக்குரியவர் கையிலயே கொடுத்துவிட்டு வந்த வரலாறே உண்டு,

இந்த இலச்சினையின் முகப்பு தெரிவிப்பது என்னவென்றால் அனைத்து நாடுகளையும் வென்று தன்னை சக்ரவர்த்தியாக நிறுவினாலும் சகோதரத்துவத்துடன் சோழத்தின் அடையாளமான புலிச்சின்னத்தையும்,

பாண்டியத்தின் அடையாளமான மீனையும், சேரளத்தின் அடையாளமான வில்லையும் சமமாகவே நிறுத்தியுள்ளான் என்பதை பறைச்சாற்றுகிறது, சளுக்கிய அடையாளமான பன்றிச் சின்னத்தை தனியாகவே காட்டியுள்ளான்.❤❤❤

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்