சேதுபதிகள் சோழன் மறவரே

சேதுபதிகள் சோழன் மறவரே

ஆன்நிரைகளைக் கவர்ந்து செல்லல்வெட்சி ஆகும். அதனை மீட்டுச்செல்வது கரந்தை என்பர். படைத்தொழில் வலிமையுடையமறவர்களே இதில் ஈடுபடுவர். இம்மறவர்களுள் சிறந்தவர்தமிழ்நாட்டு மறவர் குடியினர் ஆவார்.

வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர்எனவும் கரந்தை மறவரை வயவர், மீளியர் எனவும் அழைப்பர்.

 இதனைக்குறிப்பிடும் பதிவு வருமாறு

“இவர் தொன்றுதொட்டேதமக்கியல்பாயுள்ள வீரச் செயலானும்வில்–வாள் முதலாய படைத்தொழில்வலிமையாலுமே தம்முயிர் வாழ்தலிற்சிறந்த தமிழ்நாட்டு மறவர்குடியினராவர். “வில்லேர் வாழ்க்கைவிழுத்தொடை மறவர்”

 என்றார்அகநானூற்றினும் (35)

 இம்மறவரையேவில்லேருழவர், வாளுழவர், மழவர், வீரர் முதலிய பல பெயர்களாற் கூறுவர்முன்னோர்.

இவர் நிரைகவர்ந்துஆறலைத்துக் குறைகொள்ளுங்கொடுந்தொழிலாற் றம்முயிரோம்பும்வெட்சி மறவர் எனவும் அவ்வெட்சிமறவரை முனையிற் சிதற வீழ்த்துஅவராற் கவரப்பட்ட நிரைகளை மீட்டுஆறலையர் மற்காத்துப் பிறருயிரோம்புமுகத்தாற் றம்முயிர் வாழுங் கரந்தைமறவர் எனவும் இரு திறத்தினராவர். இதனை “ஆகுபெயர்த்துத் தருதலும்”(பொ.புறத்.5)
 என்னுந்தொல்காப்பியத்துநச்சினார்க்கினியருரையானும்“தனிமணியிரட்டுந் தாளுடைக் கடிகை, நுழைநுதிநெடுவேற் குறும்படைமழவர், முனையாகத் தந்து முரம்பின்வீழ்த்த வில்லேர் வாழ்க்கைவிழுத்தொடை மறவர்” (35) என்னும்அகநானூற்றுரையானும்அறிந்துகொள்க” எனச் சுட்டுகிறார்.

வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர்எனவும் கரந்தை மறவரை வயவர், மீளியர் எனும் பெயர்களில் அழைப்பர். இவ்விரு மறவர்களைச் “சேதுபதிகள்தீதெலாங்கழுவுஞ் சேதுநீராடப் போதுவார்யாவரையும் ஆறலை கள்வர்முதலியோராற் சிறிதும் இடர்ப்படாமற்காத்து அவர்கட்கு வேண்டுவனஉதவுதலே தமக்குறு தொழிலாகக்கொண்ட சிறப்பாற்றம்பெருவலியானே பிறருயிரோம்புங்கரந்தை மறவரேயாவர்” எனக்குறிப்பிடுகின்றார்.

இம்மறவர் வாழ்ந்த பழையவூரைக்கரந்தை எனவும் இவரைக் கரந்தையர்எனவும் இவர் தலைவனைக்கரந்தையர்கோன் எனவும் பிற்காலக்கவிகள் வழங்கி வந்தனர். சான்றாக

“அற்பனை மேவுங் கரந்தையர்கோன்ரகுநாதன்மணி” 62)”

“பாரைப் புரந்த ரகுநாதன் வெற்பிற்பகலில்விண்சேர்” (63)

“பழியுந் தவிர்த்த ரகுநாத சேதுபதிவரையீர்” (64)

“மல்லார் கரந்தை ரகுநாதன் றேவைவரையின் மணிக்” (67)

“சூரியன் வீரையர் கோன் ரகுநாதன்கரும்பிலின்று” (68)

“மைவாய்த்த வேற்படை யான்ரகுநாதன் மணவையன்னீர்” (72)

“நாவுக் கிசையும் பெரும்புக ழான்ரகுநாதன் வரைக் (74)

“காரும் பொருவுகை யான்ரகு நாதன்கரந்தையன்னீர் (75)

“கார்த்தலந் தோயுங் கொடிமதில்சூழுங் கரந்தையர்கோன் (76)

என ஒருதுறைக்கோவையிலுள்ளபாடல்கள் சுட்டுகின்றன.

இவ்வகை மறவரே தமிழ்நாட்டுமூவேந்தருக்கும் சிறந்தபெரும்படையும் படைத்தலைவருமாய்விளங்கியவர்கள் ஆவர்.

இவ்வீரரே இம்மூவேந்தரையும் தமதுஅரிய பெரிய வெற்றித் தொழில்களால்இன்புறச் செய்து அவர்களின்ஆட்சியில் செங்கோல் தலைநிமிர்ந்துநிற்கக் குறுநில வேந்தர்களாய்த்திகழ்ந்து போர்புரிவதற்குத்துணைபுரிந்தனர். “இவர் இம்மூன்றுதமிழ்வேந்தர்க்கும் உரியராதல் பற்றிமுற்காலத்தே சேரன் மறவர், பாண்டியன் மறவர், சோழன் மறவர்என மூன்று பகுதியினராகவழங்கப்பட்டனர்” (தமிழக்கக் குறுநிலவேந்தர்கள், ப.III).

சோழன் மறவரை நன்னன், ஏறை, அத்தி, கங்கன், கட்டி (அகம்.44) எனவும்

பாண்டியன்  மறவரைகோடைப்பொருநன் பண்ணி (அகம்.13) எனவும்

 சேரன் மறவரைப் பழையன், பண்ணன் (அகம்.44, 326, புறம்.183) எனவும் அழைக்கப்படுகின்றனர்.

சேதுநாட்டுப் படைவீரர் குறுநிலமன்னராயிருந்தனர் என்பதற்குத்

“தானே சேறலுந் தன்னொடு சிவணிய

சேறலும் வேந்தன் மேற்றே    (தொல்.பொருள்.அகத்.28)

எனும் சூத்திரத்தின் உரையில்நச்சினார்க்கினியர் “சொற்றச் சோழர்கொங்கர்ப்பணிஇயர், வெண்கோட்டியானைப்போர்க்கிழவோன், பழையன்மேல்வாய்த்தன்ன” என வரும்நற்றிணையை எடுத்துரைத்து இதுகுறுநில மன்னர் போல்வார் சென்றமைதோன்றக் கூறியது எனச் சுட்டுகிறார். மேற்சுட்டிய பழையன் (அகம்.44) என்பவன் சோழன்படைத்தலைவனான குறுநில மன்னன்என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

எல்லா நூல்களும் சொல்லுகிறது மறவர் சோழன் என்று விளக்கமும் கொடுத்துள்ளது

இப்ப சொல்லுங்க சேதுபதிகள் யார் என்று?

உண்மை உரக்க சொல் நீ சோழர் பரம்பரை என்று....

தொடரும் சேதுபதி மூதாதையர்கள் யார் என்பது........

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்