தேவர் பட்டம்
தேவர் பட்டம்
மறவர்களைத் "தேவர்" என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் அரசர்களுள் இராஜராஜசோழத் தேவர்,இராசேந்திர சோழத் தேவர் என பெயர் வைக்கப்பட்டு இருந்தன.
அத்துடன் இராமநாதபுரம் மறவர்களுக்கு 'செம்பியன்' என்ற பெயரும் உண்டு. 'செம்பியன்' என்றால் 'சோழன்' என்பது பொருள்.அதனாலேயே இச் செம்பிநாட்டு மறவர்கள் ஆதியில் சோழநாட்டை சேர்ந்தவர்கள் என்று 'அபிதான சிந்தாமணி' நூல் கூறுகின்றது.
சோழநாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு வந்து குடியேறிய மறவர்கள் 'செம்பிய நாட்டு மறவர்கள்'. என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களில் சேதுபதி மன்னர்கள் செம்பி நாட்டு பிரிவை சார்ந்தவர்கள். இவர்களின் நாடு 'கீழ் செம்பி நாடு' என்றும் 'வடதலை செம்பி நாடு' என்றும் கல்வெட்டுகளில் குறிக்கபட்டுள்ளனர்.
இராமநாதபுரம் வரும் முன் சேதுபதிகளின் முன்னோர் துகவூர் கூற்றத்துக் காத்தூரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்ப்பால் விரையாத கண்டனில் இருந்தனர் எனச் செப்பேடுகள் கூறுகின்றன.
Comments
Post a Comment