சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள்

சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள்

"அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி
புற்ங்கண்டல் அல்லால் இனைபடை தானை
அரசரோடு உறினும் கனைதொடை நாணும்,
கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ்
நோக்கு இரலை மருப்பின் திருந்து
மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து
ஓடா மறவர் பொருள் கொண்டு
புன்செயின் அல்லதை அன்போடு அருள்
புறம் மாறிய ஆரிடை அத்தம்.--"கடுங்கோ சேரமான்".

பொருள்:

சேனையணிகள் சூழ,அரசனே பெரும்படையுடன் வந்தாலும் அஞ்ச மாட்டர்கள்.சிலை மரத்தால் செய்த வலிமை மிகுந்த வில்லை வளைந்து அதிலே முறுக்கமைந்த நாண் கயிற்றைப் பூட்டுவர், அவர் மீது கணைதொடுப்பது தம் வீரத்துக்கு தகுதியற்றது என்று வெட்கம் கொண்டு நாணை தெறித்து ஒலி எழுப்புவர். சிங்கக் குரலைக் கேட்டு விலங்கினம் சிதறி ஓடுவதுபோல் அவ்வொலிகேட்டே அரசரோடு வந்த பெரும் படையினரும் பின் முதுகுகாட்டி ஓடுவர். அத்தகைய கொடிய ஆற்றல்கொண்டவர்,பாலை நில காட்டிலே வாழும் மறவர்கள். அவர்கள் ஆராவாரமாக வருவது கடிய துடியின் ஒலியோடு கேட்கும். வன்மைகொண்ட பார்வையும் வலி மிகுந்த கழுத்தும் உடைய கலைமானின் கொம்புகலைப் போல,அவர்களது மீசை முறுக்கொண்டு திருகித் தாழ்ந்து தொங்கும். வெம்மையான கொடுஞ்சினம் உடைய அவர்கள் செய்யும் தொழிலே தனி வகையானது. வழியில் வருபவர்களை தாக்கி அவர்களுக்கு புண்களை பரிசாக தரும் வெம்மையுடைய பாலை நிலத்தவரின் கொடிய காட்டு வழி இது. இதில் சென்று பொருள் தேடி மீள என்னுகின்றாய்.

பாடியது யார்? சேரமன்னன் "பாலை பாடிய கடுங்கோன்".ஏனெனில் சேரனும் மறமன்னனே.

இன்னோர் சங்க பாடல்களில் பாலை நில காட்டில் தூங்கும் மறவனின் காலானது. வேட்டையாடிய சிங்கத்தின் காலைபோன்றது என புகழப்படுகின்றது.

பாண்டியன் பட்டமான கௌரியர் என்ற பட்டத்தை காலம் காலமாக சூடி வருபவர்கள் சிவகங்கை மன்னர்கள். இந்த பட்டம் வேறு எவரிடமும் கிடையாது. பாண்டிய நாடும் சேதுத்துறையும் கௌரியருக்கு உரியது என சங்ககாலம் செப்பும்.

சிவகங்கையை ஸ்தாபித்தது சசிவர்ணத்தேவர் என வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்க்கு முன்பே பார்த்திபனூர் அருகே அருங்குளத்திலிருந்து சிவகங்கை நாலுக்கோட்டை நெடுக மதுரை அருகே உள்ள பழையனூர் வரை பரந்து அமைந்த ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்த உடையார் கௌரி வல்லபத் தேவர்கள் ஆண்டிருந்தனர் என்ற நிருபத்தின் ஆதாரமாக திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் கோவிலில் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.

நாலுகோட்டைப் பாளையக்காரரான பெரிய உடையார் தேவர் அந்தப் பகுதியிலேயே மிகப் பெரும் வீரராக திகழ்ந்தார் மேலும் கடமை உனர்வுடன் இராஜ விசுவாசத்துடனும்,சேதுபதிக்கு உறுதுனையாக இருந்த செயல் மறவராவார்.

அவருக்கு மூன்று மனைவியர் இருந்தனர். முதல் மனைவியை பற்றி விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. இந்த முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் சசிவர்ணத்தேவர். இவர்களுடன் பிறந்தவர்களான திரியம்பகத்தேவரும்,லவலோசனத்தேவரும் சிறுவயதிலே இறந்துவிட்டதாக கருதப்படுகின்றது. இரண்டாவது மனைவி இராமநாதபுரத்தை சார்ந்த பெரும் போர் மறவரான சங்கரத்தேவரின் மகள் சிந்தாமனி நாச்சியார் இவர் தம் தந்தை போலவே வாள் சண்டையிலும்,சிலம்பு விளையாட்டுகளிலும் வல்லவர்.

பெரிய உடையாத் தேவர் இராஜாங்க காரியமாக அடிக்கடி இராமநாதபுரம் சென்று வருவார். அப்போது சிந்தாமனி நாச்சியாரின் வீர விளையாட்டுகளைப்பார்க்க நேர்ந்தது. நாச்சியாரின் பேராற்றலை கண்டு மனதை பறிகொடுத்து நாலுக்கோட்டையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

சிந்தாமனி நாச்சியார் மூலம் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் செல்வ ரகுநாததேவர்,மற்றொருவர் சேது பந்தன நாச்சியார். செல்வ ரகுநாத தேவர் நாலுகோட்டைப் பாளையத்திலே தங்கிவிட்டார். அங்கிருந்து கொண்டு சேதுபதிகளுக்கு உதவியாக இருந்தவர்(பிற்க்கால முத்துவடுகநாத தேவர் சிவகங்கையின் இரண்டாவது அரசராக முடிசூட்டிக் கொண்டபோது,நிர்வாகத்தில் அவருக்கு உதவியாக இருந்தார்).

சிந்தாமனி நாச்சியார் தனக்கு பிறந்த மக்களை விட சசிவர்ணத்தேவரிடம் மிகுந்த பாசமும் பற்றும் வைத்து இருந்தார். பெரிய உடையனத்தேவரின் மூன்றாவது மனைவியான கோவனூர் நாச்சியாருக்கு பூவுலகத்தேவர் என்னும் மகன் இருந்தார்.

பெரிய உடையனத்தேவரின் குமாரர்களில் அழகிலும் ஆற்றலிலும் சசிவர்ந்த்தேவர் உயர்ந்து விலங்கினார்.

அவரது வீரப்பராக்கிரமங்களைக் கேள்விப்பட்ட விஜய ரகுநாத சேதுபதி சசிவரனத் தேவருக்கு தன் மகள் அகிலாண்டேஸ்வரியை திருமனம் செய்து வைத்தார்.

இத்திருமணத்திற்க்கு பின், தன் சம்பந்தியின் நிலையை உயர்த்த விரும்பினார். அதற்காக முன்னூறு போர் வீரர்களை வைத்துக் கொண்டிருந்த பெரிய உடைய தேவருக்கு,ஆயிரம் போர் வீரர்களை வைத்துக் கொள்ள அனுமதியளித்தார் மேலும் அவர்களுக்கான செலவுகளை ஈடு செய்து கொள்ளத் தேவையான வருவாயுள்ள

நிலப்பகுதியை அளித்தார். சசிவர்னத்தேவரின் திருமனத்துக்கு பின் நோய்வாய் பட்ட பெரிய உடையத்தேவர் பெரிய உடையனத்தேவரின் மரனம் சேது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பலவீனம் ஆனது. இவரது இறுதி சடங்குகள் நாலுக்கோட்டை அருகிள் உள்ள கந்தமாதனப் பொய்கையில் நடந்தது. சந்தனக் கட்டைகளால் அடுக்கப்பட்ட சிதையில் சிந்தாமனி நாச்சியார் தன் கனவருடன் தீப்பாய்ந்து மாண்டார்.

சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள் கீழே

சிவகங்கை அரசர்களின் திருநாமங்களாக செப்பேட்டில்:
--------------------------

கவுரி வல்லபத் தேவர்
குளந்தை நகராதிபன்
அரசு நிலையிட்டான்
சசிவர்ணத் தேவர்
முத்து விஜய ரகுநாதன்
பெரிய உடையார்
இந்துகுல சர்ப்ப கருடன்(சந்திரகுல சரப்பபக்ஷி[DRAGON])
அனுமக் கொடி கருடக்கொடி மகரக்கொடி புலிக்கொடி
சிங்கக் கொடி யாளிக்கொடியுடையோன்
பாண்டிய தேசத்தில் பொதியமாமலையான்
வைகையாருடையான்
புனல் பரளை நாடன்
கரந்தை நகராதிபன்
முத்து வடுக நாதன்
மும்மதயானையன்
பஞ்சகால பயங்கரன்
பஞ்சகதி புரவியுடையான்
அரசு ராவணவத ராமன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்