Posts

Showing posts from November, 2019

ருத்ராட்சம்

Image
சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். "அகோர அஸ்திரம்' என்ற ஆயுதத்தை தயார் செய்ய கண்களை மூடும்போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.

60ஐ கடந்து

Image
*ஒருவரின் பணிஓய்வுக்குப்பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ள உதவும்.* 1. *முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத்தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகிவிட்டது போல் உணர்வீர்கள்.* *அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்* 2.  *காலப்போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.* *நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி* *வயதான மனிதராக மாற்றிவிடும் நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூக...

சுந்தரம்

Image
சுட்ட திருநீறெடுத்துத் தொட்டக் கையில் வேலெடுத்துத்    தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் ... சுந்தரம் ... சுந்தரம்! அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனை    சாற்றுவது ஆறெழுத்து மந்திரம். ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை    அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே ... நெஞ்சமே ... நெஞ்சமே! அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்    ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே. கந்தனது வேலெடுத்துக் காவடிகள் தோளெடுத்துக்    கால் நடையாய் வந்துசேரும் கூட்டமே ... கூட்டமே ... கூட்டமே! அந்தத் தோளெடுத்துக் காவடிகள் தோகைமயில் வாஹனனை    சேவடிகள் தேடிவரும் நாட்டமே. பக்கமிரு மாதிருக்கச் சொக்கத்தங்க வேலெடுத்துப்    பச்சைமயில் உச்சிவரும் வேலனே ... வேலனே ... வேலனே! உந்தன் பஞ்சடியை நெஞ்சிருத்திப் பால்குடத்தைத் தோளெடுத்தால்    அஞ்சி மிகக் கெஞ்சிடுவான் காலனே காலனே காலனே! மாது குறவள்ளியுடன் வண்ணமயில் ஏறிவரும்    நீதிபதி ஆனவனே சண்முகம் ... சண்முகம் ... சண்முகம்! அந்த நீதியிலே நானும் ஒரு பாதி எனச்சேர்...

நெகிழி

Image
நெகிழியால் (plastics) ஆன செங்கல்! வீணாகும் நெகிழி  குப்பைகள், விரயமாகும், கிரானைட் சில்லுகள் போன்றவற்றை வைத்தே, உறுதியான கட்டடப் பொருட்களை படைக்கிறது, மைசூரைச் சேர்ந்த ஜ சக்ருத் டெக். மறுசுழற்சி செய்த நெகிழியை, செங்கல் மற்றும் நடைபாதை கற்களாக வடிக்கிறது சக்ருத். இதன் நிறுவனர்கள், மைசூருக்கு அண்டை மாவட்டங்களில் மறுசுழற்சி சேகரிப்பு அமைப்புகளிடமிருந்து நெகிழி  மற்றும் கிரானைட் போன்றவற்றை சேகரித்து, தனது ஆலையில் அவற்றை செங்கற்களாக வடிக்கிறது. இந்த நெகிழி்  கற்கள்,  21 டன் எடையையும், 120 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் வல்லமை படைத்தவை. இந்த பொருட் களை உருவாக்க சிமென்ட் சிறிதளவும் பயன்படுத்தப்படுவதில்லை. குப்பை மேடுகள் விரைவில் தரைமட்டமாவதற்கும், சுற்றுச் சூழல் மாசினை உருவாக்குவதை தடுப்பதற்கும், சக்ருத் போன்ற புதுமை அமைப்புகள் நமக்கு நிறையத் தேவை. மீள்

மணிகண்டன்

Image
மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள். தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார்...

சுப்பிரமணி பகவானே

Image
இப்படியே இருந்திடவோ இறைவாவுனை தொழுகின்றேன் எப்படியும் ஏற்றமுண்டு எண்ணமது உறுதியாக எப்புறமும்  நீயிருந்து   என்முன்னே வழிநடத்தும் சுப்பிரமணி பகவானே  சுந்தரமாய் வாழ்வருளே!!!

தோப்புக்கரணம்

Image
அதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் போன்றவை எமது முன்னோர்களின் காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது. முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய அர்த்தங்கள் இருக்கின்றது. இது போன்று பல ஆரோக்கிய பழக்கங்களை எமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். காதுகளில் உள்ள 200 நரம்புகளில் சீராக இரத்த ஓட்டம் ஏற்படுவதற்கும் புதிய இரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் பெரிதும் உதவுகிறது. எனவே தான் சாதரணமாகக் கூட குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஒவ்வொருவரும் அதிகாலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். அப்படி செய்தால், அன்றைய நாளில் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்குமாம். காலையில் எழுந்தவுடன் முதலில் உச்சரிக்கும் வார்த்தை நேர்மறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும். அது தெய்வப் பெயர்களாகக் கூட உச்சரிக்கலாம். காலையில் ...

தேவர் ஓர் இடதுசாரித் தலைவர்

Image
பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவர் ஓர் இடதுசாரித் தலைவர்      தோழர் கே.டி.கே. தங்கமணி நாடார் அனைவரு‌ம் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை நானும் எனது சக தோழர்களான ஜோதிபாசு,ஏ.கே. சென், பூபேஷ் குப்தா,  கிருஷ்ணன் மேனன், பெரோஸ் காந்தி அவர்களும் இங்கிலாந்தில் படித்து கொண்டிருந்த சமயத்தில், நேதாஜி அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வந்திருப்பதாக தகவல் கிட்டியது. இந்திய இளைஞர்களும், மாணவர்களும் ஒன்று திரண்டு நேதாஜி சென்ற இடமெல்லாம் வரவேற்பு கொடுத்த நேரம் அது. நேதாஜியை சந்தித்திட நாங்கள் அனைவரும் விரும்பினோம். ஆனால் என்னையும்,ஜோதிபாசு, ஏ.கே.சென், பூபேஷ் குப்தா,  கிருஷ்ணன் மேனன் ஆகியோரையும் இங்கிலாந்தை விட்டு  வெளியே செல்லக் கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டது. எனவே எங்கள் அனைவரின் சார்பாகவும் தோழர் பெரோஸ் காந்தியை அனுப்பி அயர்லாந்திற்க்கு வந்திருந்த நேதாஜியை சந்தித்திடச் செய்தோம். நாங்கள் இங்கிலாந்தில் படித்து கொண்டிருந்த நேரத்தில் 1937 இல் இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. முதன்முதலாக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டதால் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதி...

தியாகராஜ பாகவதர் தேவரை சந்தித்தார்

Image
திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் . திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் . தியாகராஜ பாகவதர் பற்றி திரை உலகில் மட்டுமல்ல இந்திய முழுவதும் அவரை அறியாதவர்கள் இருந்ததில்லை…  அவரின் பெருமை அப்பொழுதைய பிரதமர் நேருவின் பெருமையை மிஞ்சியது,,,தமிழகத்திற்கு நேரு வரும் பொழுது கூடிய கூட்டத்தை விட இவருக்கு கூடிய கூட்டம் பன்மடங்கு அதிகம்…நேருவே இதை கண்டு அசந்து போனதாக தகவல் உண்டு.. அப்பொழுதைய கால கட்டத்தில் காங்கிரஸ் வலுவடைய நேரு காமராசரை அழைத்து . பாகவதரிடம் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சொன்னார்,,காமராசர் அவரிடம் சென்று தம் கட்சியில் இணைந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.. இணைந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அளிப்பதாக உறுதி அளித்தார்…அரசியலில் சிறிதும் விருப்பம் இல்லாத அவர் அரசியலையும் ,அரசியல்வாதிகளையும் நான் விரும்புவதில்லை என்று காமராசரின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்… இந்த அளவுக்கு பெருமை வாய்ந்த மகாலிங்கத்தின் மனதில் தீராத ஒரு ஆசையுண்டு..அவரின் ஆசை தெய்வீக திருமகனார் தேவரை எப்படியாவது நேரில் அவரை கண்டு சந்திக்க வேண்டும் என்பதே !!!  ஆனால் அய்யா தேவரோ சினிமா காரர்களை விரு...

காதணி விழாவில் தேவர்

Image
முத்துராமலிங்கத் தேவர் அய்யா சிவகங்கை மன்னர் சண்முகராஜாவின் மகன் கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜாவின் காதணி விழாவில் கலந்து கொண்டு ஆன்மீகம் பற்றி இரண்டரை மணி நேரம் பேசினார். அவரது அந்த ஆன்மீக உரையின் ஒரு பகுதி காது குத்தல், கல்யாணம் என்ற வைபவம் தமிழன் மட்டுமே ஒரு தெய்வ வழிபாடாகக் கொண்டாடும் வைபவம். சிவகங்கை அரண்மனையில் கோலாகலமாக நடத்தப்பட வேண்டிய இந்த வைபவம், தென்னவராயன் புதுக்கோட்டை கிராமத்தில், பொட்டலில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலில் ஏன் நடக்கிறது? தமிழன் இறை பக்தி மிகுந்தவன். தனக்குக் குழந்தை பிறந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து தன் குழந்தையின் முகமண்டலத்தைப் பார்க்கிறான்; மூக்கை பார்க்கிறான்; அழகான வாயைப் பார்க்கிறான். அதே சமயம், குழந்தையின் காதைப் பார்க்கிறான்; அதன் வடிவத்தைப் பார்க்கிறான். தனக்கு இந்த குழந்தை பாக்கியத்தை அளித்த இறைவனின் ஓங்கார வடிவமாக காது அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறான். ஓங்கார வடிவமாக அமைந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி செலுத்த எண்ணி, தன் குழந்தைக்கு முதன், முதலாக கொண்டாடும் வைபவத்தை, காது குத்து கல்யாணமாக நடத்தி, ஓங்கார வடிவத்திற்கு நிரந்தர காணிக்கையாக, ...

மாமல்லபுரத்தில் தேவர் திருமகனார்

Image
தேவர் திருமகனார் பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள் தெரிந்தவர்கள் யாருமே இல்லை.அப்படிப்பட்ட மகான் அவர் நான் பலமுறை  முகநூலில் தெளிவுபடுத்தி இருக்கேன் தேவர் திருமகனார் மீதுள்ள  பற்று என்பது வடக்கு என்றால் , தேவர் சாதி மீதுள்ள பற்று தெற்கு . இரண்டும் எதிர் திசை. எந்த விதத்திலும் பொருந்தாது. தேவர் திருமகனார் வாழ்க்கையில் ஒரு விடயத்தை கூட நான் பின்பற்றி செல்கிறேன் என்று கூட யாருமே சொல்ல முடியாது. மனித படைப்பிற்கு அப்பாற்பட்டவர் பசும்பொன் தேவர் மாமல்லபுரத்தில் பல்லவர்கள் இடத்தில் தேவர் திருமகனார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிறை வாழ்க்கை

Image
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிறை வாழ்க்கை இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக்கூடியவரா தேவர். தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்கிறார். வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில் 18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு தேவர் ஆறாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார். காந்தி நேரு படேல் முதல்  காமராஜர் வரை சாதாரண சிறையில் இருக்கும்போது தேவர் திருமகனார் மட்டும் டாமோ என்ற இராணுவ சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டார். தன் வாழ்வில் 4000 இந்த ...

மன்னவரு இங்கு நடந்து வந்தா

Image
மன்னவரு இங்கு நடந்து வந்தா மதுரை ஜில்லாவே வணங்குமடா... தென்னவரு கொஞ்சம் கையசச்சா அந்த கடல்அலை கூட அடங்குமடா... நல்லவரு ஒரு வார்த்தை சொன்னா எங்க நாட்டு சனத்துக்கு வேதமடா... வல்லவரு ஒரு கண்ணசச்சா வெற்றிவேலென படைகள் பொங்குமடா... எங்க சாமி பேச்செடுத்தா கோட்டையெல்லாம் குலுங்குமடா.. அவர் பாதை மண்ணெடுத்து பூசிகிட்டா வெற்றியடா...🙏🙏🙏

தமிழ் எண்கள்

Image
*தமிழ் எண்கள்* 1 – க, 2 – உ, 3 – ங, 4 – ச, 5 – ரு, 6 – சு, 7 – எ, 8 – அ, 9 – கூ, 10 – கo, 11 – கக, 12 – கஉ, 13 – கங, 14 – கச, 15 – கரு, 16 – கசு, 17 – கஎ, 18 – கஅ, 19 – ககூ, 20 – உo 21 – உக, 22 – உஉ, 23 – உங, 24 – உச, 25 – உரு, 26 – உசு, 27 – உஎ, 28 – உஅ, 29 – உகூ, 30 – ஙo 31 – ஙக, 32 – ஙஉ, 33 – ஙங, 34 – ஙச, 35 – ஙரு, 36 – ஙசு, 37 – ஙஎ, 38 – ஙஅ, 39 – ஙகூ, 40 – சo, 41 – சக, 42 – சஉ, 43 – சங, 44 – சச, 45 – சரு, 46 – சசு, 47 – சஎ, 48 – சஅ, 49 – சகூ, 50 – ருo 51 – ருக, 52 – ருஉ, 53 – ருங, 54 – ருச, 55 – ருரு, 56 – ருஎ, 57 – ருஎ, 58 – ருஎ, 59 – ருகூ, 60 – சுo 61 – சுக, 62 – சுஉ, 63 – சுங, 64 – சுச, 65 – சுரு, 66 – சுசு, 67 – சுஎ, 68 – சுஅ, 69 – சுகூ, 70 – எo 71 – எக, 72 – எஉ, 73 – எங, 74 – ஏசு, 75 – எரு, 76 – எசு, 77 – எஎ, 78 – எஅ, 79 – எகூ, 80 – அo 81 – அக, 82 – அஉ, 83 – அங, 84 – அச, 85 – அரு, 86 – அசு, 87 – அஎ, 88 – அஅ, 89 – அகூ, 90 – கூo 91 – கூக, 92 – கூஉ, 93- கூங, 94 – கூச, 95 – கூரு, 96 – கூசு, 97 – கூஎ, 98 – கூஅ, 99 – கூகூ, 100 – கoo 101 – கoக, 102- கoஉ, 103 – கoங, 104 – ...

பர்மா வாண்டையார்

Image
1956 ஆம் ஆண்டு Rss கோவாழ்க்கரை கை எடுத்து கும்பிட்டு வணங்கி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தேவர் திருமகனார் பெரிய மீசையுடன் அழைத்து செல்வதாக h.ராஜா போன்றவர்கள் கிளப்பி விட்டு தவறான புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.// ஆனால் தேவர் திருமகனார் உண்மையான வரலாறு  1956 ஆம் ஆண்டு  உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு பர்மாவில்  வீர வாள்  வழங்குபவர் பர்மா வாண்டையார் அவர்கள் ...இவர்கள் ஒரு தெருவையே வீடாக கொண்டவர்கள். அதாவது தங்களுக்கு சொந்தமான 112 வீட்டை பர்மா கலவரத்தில் அப்படியே விட்டுவிட்டு இந்தியா வந்தவர்.... தஞ்சாவூர் பூர்வீகம்.  மேலும் தேவர் திருமகனார் அவர்களுக்கு இது இரண்டாவது பர்மிய பயணம். இதில் நூற்றுக்கணக்கான photos மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட விபரம் h.ராஜா போன்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது தான் கொடுமை.

செம்பியநாட்டு மறவர் பட்டம் கொடுத்தது ராஜராஜசோழன்

Image
செம்பியநாட்டு மறவர் பட்டம் கொடுத்தது ராஜராஜசோழன்...நாடாண்ட மறவர் கூட்டம்::-----தலக்காவல்,நாடு காவல்,திசைக்காவல் என்ற அறப்புறங்காவல் முறையிலே தமக்குரிய நாட்டை ஆண்டு வந்தவர்கள் மறவர் கூட்டம்.குறு நில மன்னர்களாக ராமநாதபுரம்,சிவகங்கை,சிவகிரி,சேத்தூர்,கொல்லங்கொண்டான்,நெற்கட்டும் செவ்வல்,தலைவன் கோட்டை சொக்கன் பட்டி,குருக்கள் பட்டி ,சிங்கம்பட்டி,ஊத்துமலை,அழகா புரி,நடுவக்குறிச்சி, சுரண்டை,ஊர்க்காடு,மணியாச்சி,கடம்பூர், ஏழாயிரம் பண்ணை ஆகிய இடங்களை ஆண்டனர்.1782 ல்  திருக்கரங்குடியில் கோட்டை கட்டி வாழ்ந்தவர் சிவராமத்தலைவர் எனும் பாளையக்காரர்.மறவர் குடும்பத்தில் பலம் வாய்ந்த தலைவர்.இவருக்குப்பிறகு இவரது வழியினரே தலைவர் என அழைக்கப்பட்டனர்.நெல்லை மாவட்டத்தில் இன்றும் காணலாம்.ராமநாதபுர மன்னர்களுக்கு செம்பி நாடன் என்றும்,சேற்றூருக்கு சோழகர் என்றும்,விக்கிரம சோழன் என்றும்,கொல்லங்கொண்டார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் காணும் போது இவர்கள் ஆதிகாலத்தில் கள்ளர்கள் என தெரிகிறது.1799 ல் 2113 கிராமங்கள் நெல்லை மாவட்டத்தில் 1635 கிராமங்கள் மறவர்களுக்கு சொந்தம். கி பி 1059 ல் இலங்கைக்கு படையெடுத்து சென்றான்...