ஆதி சங்கரர்
1. சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும்.
2. ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார்.
3. விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்கள் மீதும் சங்கரர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன.
4. பத்ரிநாத், திருச்செந்தூர் உள்பட பல ஆலயங்களில் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் அர்ச்சகர்களாக இருந்து பூஜை செய்யும் முறையை ஆதிசங்கரர் உருவாக்கினார்.
5. ராமேசுவரம் கோவிலில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை கொண்டு வந்ததும் ஆதிசங்கரரே.
6. காசியில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நவனாப் புதிய சிந்தனை பெற்ற ஆதிசங்கரர் ‘மனீஷா பஞ்சகம்’ என்ற 5 சுலோகங்களை இயற்றினார்.
7. ஒரு தடவை ஆதிசங்கரர் இமயமலையில் அடர்ந்த காட்டுக்குள் தியானம் செய்ய சென்றார். அப்போது அவர் கமண்டலத்தையும் தண்டத்தையும் தூக்கி வீசினார். அந்த தண்டம் மரமாகவும் கமண்டலம் நதியாகவும் மாறியது.
8. அம்பாளை 64 உபகாரங்களை அளித்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டின் போது ஸ்ரீ சக்கர சிம்மாசனத்தில் அன்னை எழுந்தருளி இருப்பதாக பாவித்து பூஜிப்பது நல்லது.
9. யந்திரத்தின் நடுவில் பிந்துவில் அம்பிகையை எழுந்தருளச்செய்து, அவளது பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி ஒவ்வொரு கோணங்களிலும் எழுந்தருளி இருப்பதாக பாவித்து வழிபடுவதே ஸ்ரீசக்கர பூஜையாகும்.
10. ஆதிசங்கரர் நிறுவியது போன்று தற்போது பல பல அம்பிகை தலங்களில் ஸ்ரீசக்கர வழிபாடு நடத்தப்படுகிறது. ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி மதில்களாகவும் கோட்டைகளாகவும் 44 வரிசைகளை பாவனையுடன் பூஜிக்க வேண்டும். இதுவே ஸ்ரீசக்கர பூஜையின் முதன்மையான அம்சமாக சொல்லப்படுகிறது.
11. ஸ்ரீ சக்கர வழிபாடுக்கு “ வித்யோபாகனை” என்ற பெயரும் உண்டு. ஆதிசங்கரர் வகுத்து கொடுத்துள்ள நெறிப்படி இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு நடத்தப்படுகிறது.
12. ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீ சக்கரத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அவற்றில் கணித அறிவும், விஞ்ஞான உணர்வும் நிரம்பி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
13. சக்கரங்கள் அனைத்துக்கும் ஸ்ரீ சக்கரமே ராஜாவாக கருதப்படுகிறது. எனவே ஸ்ரீ சக்கரத்தை “ சக்ரராஜம்“ என்று போற்றுகிறார்கள்.
14. யந்திரங்களில் நிறைய எழுத்துக்கள் காணப்படும். ஆனால் சக்கரத்தில் இருப்பது இல்லை.
15. ஆதி சங்கரர் நிறுவியுள்ள ஸ்ரீ சக்கரங்களை முறைப்படி வழிபடுபவர்கள் யோகமும், குரு பலனும் கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறமுடியும்
Comments
Post a Comment