பூண்டி ஐயா
தஞ்சை மாநகரத்தின் பெரும் பகுதி ஜமீனாக இருந்த #துளசி_அய்யா_வாண்டையார் குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டது தான். அவருக்கு சொந்தமான பூண்டி புஷ்பம் கல்லூரியில் செயலாளராக இருந்து கடைசி வரை ஒரு பைசா கூட நன்கொடை வாங்காமல் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வித்திட்டவர். அவரது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் பல அரசு பதவிகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனால் டெல்டா பகுதியில் துளசி அய்யா வாண்டையாரை `#கல்வி_காவலர்’ என்றே அழைக்கின்றனர்.
காந்திய கொள்கையை உறுதியாக பற்றி கொண்டு கடைசி வரை கடைபிடித்தவர். #காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்து வந்தார். உணவு கட்டுப்பாடு, யோகா, தினசரி மூச்சு பயிற்சி என எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், கடைசி வரை மருத்துவமனைக்கு பக்கமே எட்டி பார்க்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்.
.
தனக்கு யாரேனும் பரிசு கொடுத்தால் அதை விட கூடுதலான பரிசை கொடுத்து அன்பால் திணறடிப்பார். நேரம் தவறாமைக்கு உதாரணமாக இருப்பார். இவரது தலைமையின் கீழ் ஆயிரகணக்கான திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். ஒரு திருமணத்திற்கு கூட நேரம் தவறி சென்றதே இல்லை. கட்டாயம் ஏதோ ஒரு வெள்ளி பொருளை பரிசாக வழங்குவார். சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர். ஓவியர் மணியம் வரைந்த #பொன்னியின்_செல்வன் ஓவியக் கதையில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் மாடலாக துளசி அய்யா வாண்டையார் இருந்தார் என்பது பலருக்கு தெரியாத தகவல்.
எம்.பியாக இருந்த போது ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் அதிகம் நேரம் இருந்த எம்பிக்களின் பட்டியலில் இவர் பெயரும் உள்ளது . தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் #ஒபாமா எழுதிய நூல்களை படித்து விட்டு மெயில் மூலம் தனது கருத்தை அனுப்பி வைத்தார். அதனை படித்து விட்டு ஒபாமா துளசி அய்யா வாண்டையாருக்கு ரிப்ளை அனுப்பினார். அப்போது முதல் மெயில் மூலம் இருவரும் நட்பு பாராட்டி வந்தனர். அவரை பற்றியறிந்த ஒபாமா, `உங்களுக்கோ அல்லது உங்கள் கல்லூரிக்கோ என்ன உதவி வேண்டும் கேளுங்கள் செய்து தருகிறேன்’ என கேட்க, `எனக்கு தேவையானவை கடவுள் புண்ணியத்தால் கிடைத்து விட்டது. அந்த உதவியை ஏழை மாணவர்களுக்கு செய்யுங்கன்னு’ மெயில் அனுப்பி ஒபாமாவை மெய் சிலிரிக்க வைத்தார். தனது கல்லூரி விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைத்து வந்த போது கல்லூரியின் நிர்வாகத்தை பார்த்து #அப்துல்கலாம் வியந்து பாராட்டினார்.
அமெரிக்கன் பயோ கிராபிக் என்ற இன்ஸ்டியூட் உலகில் தலைசிறந்த 500 மனிதர்களை தேர்ந்தெடுத்தது. அதில் துளசி அய்யா வாண்டையாரும் இடம் பெற்றார் என்பது சிறப்புகுரியது.
#என்றும்_நினைவில்_வாழ்வீராக!
Comments
Post a Comment