மழவராயர்கள்

மழவராயர்கள்  பட்டப்பெயர்

சோழர்களுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர்

மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மழவன். மழவன்கோட்டை (மகழன்கோட்டை) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மழவராயன், மழுவாளி, எனவும் வழங்கப்பட்டது. மழபாடி என்னும் தேவார சிவதல நகரத்தையும், மழவராயநல்லூர், மழவராயன்காடு, மழவரயன்குடிக்காடு, மழவராயன்பட்டி, மழவங்காடு (மழவனிக்காடு) மழவராயன்பேட்டை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி என்ற பட்டங்களை பெற்றனர். மழவரென்ற சொல்லுக்கு வீரர்,இளையோர் எனப் பொருள். மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல்காப்பியம்.மழவர் சிலர் சேர அரசர்களுக்கும், அதியமாங்களுக்கும் பிற அரசர்களுக்கும் மெய்காப்பாளராக இருந்துள்ளனர். சேரமன்னன் மழவர் மெய்ம்மறை என அழைக்கப்ப்டுகிறான். எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்கமுடியாத மழவர் தமிழ்நாட்டின் திருவேங்கடமலை வரை சுற்றி திரிந்தனர். பின்பு அமைதியடைந்து சோழ நாட்டில் தங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் நிலையாக தங்கி வாழந்த பகுதி மழநாடு(மழபாடி) எனப்பட்டது. மழவராயர் என்னும் பட்டம்
வீரர்களுக்கு அரசர் அல்லது தலைவர் என்று பொருள்படும். இவர்கள் சோழகளுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர். சோழர்களின் படைத்தலைவர்களாயிருந்து பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மழவன் என்பான் இராசராசசோழன் காலத்தில் அவன் கீழ் ஆண்ட குறுநில மன்னர்களில் முதன்மையானவன். இவன் பேரரசர் போன்று பெருந்தரம் அதிகாரிகளை நியமிக்கும் உரிமைபெற்றிருந்தான்.
கொல்லி மழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசசோழனுக்கு கீழிருந்த குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை இராசரரசசோழனின் தந்தை பராந்தகச் சோழனுடன் பங்கேற்று ஈழப்போரில் உயிர் துறந்தான். மும்முடிச் சோழன் பரமன் மழபாடியார். இவன் இராசராசசோழனுக்கு படைத்தலைவனாக சீத்புலி, பாகி நாடுகளை வென்று வெற்றியைத் தந்தவன் உதயதிவாகரன் கூத்தாடியான வீரராசேந்திர மழவராயன். இவன் இரண்டாம் இராசேந்திரசோழனின் அரசியல் அதிகாரியாவான். இவன் அரச ஆணைகளில் கையெழுத்திட்ட ஆவனங்களையும் அறியமுடிகிறது.
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார்.
உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார்.
இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார்.
மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது. மன்னார்குடி வட்டத்தில் மழவராயர் நல்லூர் என்ற ஊரும், பாண்டியநாட்டில் மழவராயன் ஏந்தல் என்ற ஊரும் உள்ளது. பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும் உண்டு. மழவராயர் பட்டம் தாங்கிய குடியினர் ஒரத்தநாடு வட்டம் நெல்லுப்பட்டு...நன்றி...சூர்யா சேண்டப்பிரியர்...

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்