ஒரே #நாளில் தூக்கிலிடப்பட்ட501கள்ளர்கள்


******#ஒரே #நாளில் #தூக்கிலிடப்பட்ட501*****
****************#கள்ளர்கள்*******************

மருத நாயகம் என்கிற யூசப் கானுக்கு கிபி1759ல் மதுரை கவர்னராக பிரிட்டிஸ் கவுன்சில் அறிவித்து, ஒட்டு மொத்த மதுரையும் பிரிட்டிஸ் கம்பெனியின் காலடியில் கொண்டு வர அறிவுறுத்தியது.

இதனை ஏற்றுக்கொண்ட மருதநாயகம் மதுரையை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், தென்னகத்தில் உள்ள மற்ற பாளையக்காரர்களை அச்சுருத்தவும், மிகவும் கொடுரூரமான நடவடிக்ககைகளை கையாளுகிறார்.

இதனை மருத நாயகத்துடன் இறுதி வரை பயணம் செய்த பிரெஞ்சு வீரர் M.Marchant வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அப்படி அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியது:

மருத நாயகம் மதுரையின் கவர்னராக ஆனவுடன், பாளையக்காரர்களின் புரட்சியை அடக்க, மதுரையில் தன்னை எதிர்த்த மேலூர் நாட்டு கள்ளர் தலைவரையும், அவருக்காக சண்டையிட்ட 500கள்ளர்களையும்.....!

ஒரே நாளில் மருதநாயகம் தூக்கிலிட்டார், இந்த கொடுரூரமான சம்பவம் அனைத்து தென் பாளையக்காரர்களையும் அச்சுருத்தியது, பல பாளையக்காரர்கள் புரட்சியை கைவிட்டு அமைதிக்கு திரும்பினர் என்றும் வாக்குமூலம் அளிக்கிறார்.

அந்த கள்ளர் தலைவரை மதுரை பாளையக்காரர் என்று குறிக்கிறார், ஆனால் மதுரையில் எந்த பாளையமும் இல்லை, மேலூர் நாட்டு கள்ளர் தலைவரை அங்கு பாளையக்காரர் என்று குறிக்கிறார்.

இன்றுள்ள காலக்கட்டத்தில் பல பெண்களை கற்பழித்து கொலை செய்யும் மிருகத்திற்கு தூக்கு தண்டை அளிக்க யோசிக்கிறது, அப்படியே தூக்கு தண்டனை கொடுத்தாலும் கூட 20ஆண்டுகள் கழித்து தூக்கு தண்டனையை ரத்து செய்துவிடுகிறது.

அப்படி ரத்து செய்துவிட்டு 20வருடம் தண்டனை அணுபவித்து விட்டான் என்று அவனை விடுதலையும் செய்கிறது🤦🏻‍♂️

ஆனால் தங்களுடைய சுயாட்சிக்காக கள்ளர் பெருங்குடிகள் அன்னிய அரசிற்காக எதிர்த்து போர் செய்ததற்காக ஒரே நாளில் ஒரே நேரத்தில் 501பேரும் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனக்கு தெரிந்த வரை 501பேரை ஒரே நேரத்தில் பிரிட்டீஸாரால் இந்தியாவில் வேறு எங்கும் தூக்கிலிடப்பட்டதில்லை.😰

இன்று பல மேடைகளில் வந்தேரிகளை விரட்டுவோம் என்று கூக்குரலிடும் அரசியல் தலைவர்களுக்கு, காலம் காலமாக இந்த தமிழ் மண்ணுக்காவும்,தமிழ் மக்களுக்காகவும் வந்தேரிகளுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்த இந்த கள்ளர் பெருமக்களை புறக்கணிக்க எப்படி தான் மனம் வருகிறதோ........?

மதுரை சுற்றி இருக்கும் பாறை கற்கள் கூட கண்ணீர் வடித்திருக்கும் இந்த சம்பத்திற்காக....😰

ஆனால் இன்றைய தமிழ் உணர்வாளர்களுக்கு....?

501கள்ளர்களை தூக்கிலிடப்பட்ட இடம் திருப்பரங்குன்றம் என கணிக்கிறார். பிரிட்டீஸ் இந்தியாவின் முன்னாள் ஆவணக்காப்பாளர் S.C HILL

இனி திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் போது நான் முருகனை வணங்குகிறனோ இல்லையோ,
என்னுடைய முன்னோர்களை கருப்பர்களாக வணங்குவேன்.

குறிப்பு: சில நபர்கள் சோழபாண்டியன் அவர் சார்ந்த சமூகத்தின் பெருமைகளை தூக்கி நிறுத்துகிறார் என்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில்: நான் ஒரு பிணம் தோண்டி.....! ஒவ்வொரு நூற்றாண்டில் உயிர் தியாகம் செய்த என்னுடைய முன்னோர்களின் பிணத்தை வரலாறோடு தோண்டி எடுத்து அதை ஆவணப்படுத்துகிறேன், ஒவ்வொரு தேடலும் எனக்கு கண்ணீரை மட்டுமே பரிசாக தருகிறது. இந்த பிணம் தோண்டும் வேலை என்னோடு போகட்டும்🙏

நன்றி
THE REBEL COMMANDANT BY S.C HILL

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு...மாயத்தேவர் பதிவு

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்