நாரையூர்


நாரையூர்
கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் நாச்சியார் கோவிலுக்கு முன் உள்ளது இத்தலம். சித்தர்கள் பலரும் பூசித்ததால் சித்தீச்சரம் எனப்பெயராயிற்று. மேலும் செல்வத்திற்கு அதிபதியாம் திருமகள் ஸ்ரீலெட்சுமி தேவி அவதரித்ததும் இத்தலத்திலேயே ஆகும். ஸ்ரீ அதி மேதாவி மகரிஷி என்றொருவர் இத்தலத்தில் தவம் செய்து வந்தார் அருகேயுள்ள சித்தாம்ருத தடாகம் எனும் குளத்தில் நீராடி ஸ்ரீ அதிமேதாவி மகரிஷி தவம் செய்து வர ஸ்ரீசித்தனாதர் காட்சியளித்து என்னவரம் வேண்டும் எனக் கேட்டார். மஹாலெட்சுமி தேவியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் எனக் கேட்க அவவாறே அருளினார். அதன் படியே ஸ்ரீலெஷ்மிதேவி இத்தலத்தில் பிறந்து தக்கபருவம் அடைந்ததும் ஸ்ரீபரமேஸ்வரனும்பார்வதிதேவியும் சேர்ந்து ஸ்ரீஸ்ரீநிவாசப்பெருமளுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஸ்ரீ அதிமேதாவி மகரிஷியும் பேரானந்தம் அடைந்தார்.

முக்கிய ஸ்தலம்:
கடும் கோப துர்வாசர் ஸ்ரீ சித்தனாதரை வழிபட அவருடைய சாபங்கள் நீங்கி முக்தியை அளித்த ஸ்தலமாகும். 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் சித்தர் இத்தலத்தில் வெகுகாலம் யோக தவம் செய்து வழிபட்டுள்ளார். மேலும் பல சித்தர்கள் இத்தலத்தில் உறைந்து யோக தவமியற்றி இறைவனை உணர்ந்துள்ளனர். இதனாலேயே இறைவனுக்கு சித்தனாதர் என்றும் கோயிலுக்கு சித்தீச்சுரம் என்றும் பெயர் உண்டாகியுள்ளது.

நரையூர்
ஸ்ரீ மந் நாராயணமூர்த்தி நாராயண பட்சிரூபமாய் எழுந்தருளி எம்பெருமானை பூசித்து சாபம் விலகப் பெற்றதால் இத்தலத்திற்கு நரையூர் என்ற பெயரும் உண்டாயிற்று. இக்கோயிலினுள் பல இடங்களில் சித்தர்கள் பலரின் உருவச்சிலைகள் இன்றும் உள்ளது.

பலன்
இத்தல மூர்த்தி சித்தனாதருக்கும், சித்தருக்கும் நல்லெண்ணெய் அபிஷேகமும் சூல தீர்த்தாபிஷேகமும் செய்து அதனை அருமருந்தாக அருந்தினால் நமது உடலில் உள்ள அனைத்து வித வெள்ளை ரோகங்களும் நிவர்த்தியாகும். ஸ்ரீ குபேரமழலை ஸ்ரீமஹாலெஷ்மியே அவதரித்த இத்தலத்தில் தொடர்ந்து 16 வெள்ளிக் கிழமைகள் மஹாலெஷ்மிக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து பூர்த்தியில் 108,300 வீதம் செந்தாமரையை கொண்டு யாகம் செய்தால் மிகச் சிறப்பானது.----------தக்கனது வேள்விகெட சாடினானைத்
தலைகலனாப் பலிஏற்ற தலைவன்தன்னை
கொக்ரைச்சாரி வீணைப் பாணியானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
அறுமுகனோ டானைமுகற் கப்பன் தன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற்றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே
- திருநாவுக்கரசர்

Comments

  1. Merkur 37C Safety Razor Review – Merkur 37C
    The Merkur 37c goyangfc is an excellent short handled DE safety razor. It is more suitable https://jancasino.com/review/merit-casino/ for both heavy and non-slip hands and is therefore a great gri-go.com option https://deccasino.com/review/merit-casino/ for experienced

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்