வைத்தியநாதர்_திருமழபாடி

#வைத்தியநாதர்_திருமழபாடி




இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச #நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. 

நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும் என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், #இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார்.இங்குள்ள #பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. 

சிவன் பிரகாரத்தில் இரண்டு #தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. 

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தலம் இது.பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் #நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். 

மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் #மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

தஞ்சாவூர் மற்றும் லால்குடியிலிருந்து 28கி.மீ தூரத்தில் உள்ளது.


 

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்