Skip to main content

முசுகுந்தன்

முசுகுந்தன்...இவன், எல்லாச் சங்கப் புலவராலும் பிற்பட்ட புலவராலும் சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் குறிக்கப்பட்டுள்ளான்.இவன் வரலாறு பாரதம், இராமாயணம் முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இவன், பருந்திற்கு அஞ்சித் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறவினைக் காக்கக் தன் தசையைக் கொடுத்தவன் என்பது அனைவரும் அறிந்ததேயாகும்.

இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள் 
புறநானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரிய புராணம் முதலியன இவனைக் குறிக்கின்றன.

“ புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் #செம்பியன் மருக!”
- புறநானுாறு

“தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!”

“புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறைவில் இடம்பரிந்த #கொற்றவன்.”
- சிலப்பதிகாரம்

“உடல்க லக்கற வரிந்து தசை யிட்டும் ஒருவன்
ஒருதுலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும்.”
- கலிங்கத்துப்பரணி

“உலகறியக் காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து
நூக்கும் துலைபுக்க தூயோன்.”
- விக்கிரம சோழன் உலா

“துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச் சோணாடு”
- பெரிய புராணம்
#முசுகுந்தன் 
அரசு
முசுகுந்தன் [*] என்று பெயரையுடைய சோழ மன்னன் கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில் கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும்! இவன் இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.

#சிவப்பணி
இவன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’ எனப்படுகின்றன.

நாளங்காடிப் பூதம்
இந்திரன் முசுகுந்தனுக்கு மெய்க்காவலாகுமாறு வலிய பூதம் ஒன்றை அனுப்பினான். அது பூம்புகார் நகரம் சென்று, மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பகுதிகட்கும் இருந்த நாள் அங்காடியில் (பகற்காலக் கடைத் தெரு) இருந்து, தன் பணியைச் செய்து வந்தது. அப்பூதம், புகார் நகரில் இந்திர விழாச் செய்யப்படா தொழியின் வெகுண்டு துன்பம் விளைவிக்கும் என்பது மணிமேகலை காலத்து மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையாகும்.இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள் முசுகுந்தன் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, கந்தபுராணம், ஒரு துறைக்கோவை முதலியவற்றில் குறிக்கப்பட்டுள்ளான். இக்குறிப்புகளில் சிறப்பாக அறியத்தக்கது - முசுகுந்தன் காலத்திலே காவிரிப்பூம் பட்டினம் நன்னிலையில் இருந்தது என்பதே ஆகும். இத்துடன், ‘கி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே தென் இந்தியா மேனாடுகளுடன் சிறக்க வாணிபம் நடத்தி வந்தது’ என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர் கூறும் கூற்றை ஒத்திட்டுப் பார்த்தல் இன்பம் பயப்பதாகும்.

Comments

Popular posts from this blog

வாணர் குல அரசர்கள்

வாணர் குல அரசர்கள். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது.. சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக. "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து கு

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.------சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பறவை நாச்சியார்

அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ